கைமாறிய மனைவிகள்.. கணவர்கள் எச்சரித்தும் விடாத இளைஞர் - கடைசியில் இப்படியா நடக்கணும்.!!

போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Murder of youth who were in abusive relationship with their wives

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியை  சேர்ந்தவர் செல்வகுமார். இவர் கூலித்தொழிலாளி ஆவார். இவருடைய மகன் சசிகுமார்.

இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் தவணை வசூலிக்கும் முகவராக வேலை செய்து வந்தார். கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதிவழக்கம்போல் வேலைக்குச் சென்ற சசிகுமார், இரவு 10 மணியாகியும் வீடு திரும்பவில்லை. இதை அடுத்து பெற்றோர் அவருடைய அலைபேசிக்கு தொடர்பு கொண்டனர்.

Murder of youth who were in abusive relationship with their wives

அப்போது சசிகுமார், இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவதாகக் கூறியுள்ளார். நள்ளிரவைக் கடந்த பிறகும் அவர் வீட்டுக்கு வரவில்லை.  அடுத்த நாளான திங்கட்கிழமை அதிகாலை, அந்த ஊரின் அருகே உள்ள காட்டுப்பகுதியில் சசிகுமார் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுச் சடலமாகக் கிடப்பது தெரியவந்தது. இதனை கண்டவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பிறகு போலீசார் சடலத்தைக் கைப்பற்றி நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க..TN Rain Alert : மார்ச் 4ம் தேதி தமிழகத்தில் கனமழை ஊத்தப்போகுது..! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? முழு விபரம்

Murder of youth who were in abusive relationship with their wives

அதன்படி போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். சசிகுமாருக்கு பெண்கள் சிலருடன் இருந்த தவறான தொடர்பால் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. திருமணம் ஆகாத சசிகுமார், நிதி நிறுவனத்திலும் வங்கியிலும் கடன் வாங்கித் தருவதாகப் பல பெண்களைத் தனது வலையில் விழவைத்துள்ளார். அவர்களுடன் முறையற்ற உறவில் இருந்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. கடந்த சில மாதங்களாகக் குறிப்பிட்ட பெண் ஒருவருடன் மிக நெருக்கமான தொடர்பில் இருந்துள்ளார்.

Murder of youth who were in abusive relationship with their wives

இதையறிந்த அந்தப் பெண்ணின் கணவர், இருவரையும் கையும் களவுமாகப் பிடித்து எச்சரித்துள்ளார். அதன் பிறகும் அவர்கள் தொடர்பைக் கைவிடாமல் தொடர்ந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கணவர், சசிகுமாரை கொலை செய்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. சசிகுமாரின் அலைபேசியில் பேசியவர்கள் யார் யார் என்ற விவரங்களைக் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். அந்த எண்களுடன் தொடர்பு கொண்டும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..Bank Holiday : மார்ச் மாதத்தில் வங்கி விடுமுறை எத்தனை நாட்கள் தெரியுமா.? முழு விபரம் உள்ளே !!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios