Tripura election:அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா!திரிபுராவில் பரமவைரி காங்கிரஸ்,சிபிஎம் தேர்தலுக்காக கைகோர்ப்பு

கேரள மாநிலத்தில் எதிர்த் திசையில் பயணிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள், திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

Tripura elections will be contested by CPI(M) and Congress jointly.

கேரள மாநிலத்தில் எதிர்த் திசையில் பயணிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள், திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளன.

திரிபுராவில் மாணிக் சர்க்கார் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு 25 ஆண்டுகாலம் ஆட்சி நடத்தியது. கடந்த 2018ம் ஆண்டு கம்யூனிஸ்ட் அரசை வீழ்த்தி பாஜக ஆட்சியில் அமர்ந்தது. அப்போது கம்யூனிஸ்ட் ஆட்சி இருக்கும் போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்த காங்கிரஸ் கட்சி, இப்போது கம்யூனிஸ்ட் கட்சியுடன் கை கோர்த்து களமிறங்குகிறது.

 

பாஜக தலைவர் நுபர் ஷர்மாவுக்கு துப்பாக்கி லைசன்ஸ் ! பாலியல், கொலை மிரட்டல் எதிரொலி

திரிபுராவில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் பரம எதிரிகளாக வலம் வந்தநிலையில் இப்போது இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளனர். கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக போராட்டம் செய்யும் காங்கிரஸ் கட்சி, திரிபுராவில் கைகோர்க்க இருக்கிறது

காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜெய் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜிதேந்திர சவுத்ரி ஆகியோர் இடையே நேற்று கூட்டணி குறித்த ஒப்பந்தம் இறுதியானது. 

இதையடுத்து, வரும் மார்ச்-ஏப்ரல் மாதத்தில் திரிபுராவில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கூட்டணி உறுதியாகியுள்ளது.

ஆசிரியர்களை ‘சார்’, ‘மேடம்’ என கூப்பிடாதிங்க: பள்ளிகளுக்கு கேரள குழந்தைகள் ஆணையம் உத்தரவு

காங்கிரஸ் பொதுச்செயலாளர் அஜெய் குமார் கூறுகையில் “ மாநில காங்கிரஸ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் வரும் நாட்களில் தேர்தலுக்கு எவ்வாறு தயாராவது, தொகுதி பங்கீடு ஆகியவை குறித்து ஆலோசிக்கும்” எனத் தெரிவித்தார்.

சிபிஎம் ஜிதேந்திர சவுத்ரி கூறுகையில் “ இருக ட்சிகளுமே திறந்த மனதுடன் ஆலோசனையைத் தொடங்கியுள்ளோம், மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றி, பாஜகவை வீழ்த்த வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக அரசியலமைப்பு உத்தரவுகள் அனைத்தையும் பாஜக சிதைத்து வருகிறது.

மக்கள் பாஜக ஆட்சியை முடிவுக்கு வர விரும்புகிறார்கள், மக்களின் விருப்பத்தை மதித்து, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் இணைந்து தேர்தலில் போட்டியிடுகிறோம். தேர்தலில் தொகுதி இடங்கள் முக்கியமல்ல, பாஜகவை தோற்கடிப்பதுதான் முக்கிய நோக்கம்”எனத் தெரிவித்தார்

மாநிலத்தில் எதிர்துருவங்களாக இருந்த இரு கட்சிகளும் தேர்தலுக்காக கைகோர்த்திருப்பது திரிபுராவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ல் தொடக்கம்: 66 நாட்கள் நடக்கிறது

ஆனால், பாஜக மாநிலத் தலைவர் ராஜிவ் பட்டாச்சார்யா கூறுகையில் “ திரிபுராவில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி தங்களுக்குத்தான் சாதகம். இரு கட்சிகளும் இதற்கும் மறைந்திருந்து உறவு வைத்திருந்தார்கள், இப்போது வெளிப்படையாகிவிட்டது. காங்கிரஸுடன் ஏற்பட்ட புரிதல் காரணமாகத்தான் 25 ஆண்டுகளாக திரிபுராவில் மார்க்சிஸ்ட் ஆட்சியில் இருக்க முடிந்தது” எனத் தெரிவித்தார்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios