Asianet News TamilAsianet News Tamil

ஆசிரியர்களை ‘சார்’, ‘மேடம்’ என கூப்பிடாதிங்க: பள்ளிகளுக்கு கேரள குழந்தைகள் ஆணையம் உத்தரவு

கேரள பள்ளிகளில் இனிமேல் மாணவர்கள் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என்று குழந்தைகளை கூப்பிட வற்புறுத்தக்கூடாது, பொதுவாக டீச்சர் என்ற வார்த்தையை பயன்படுத்தலாம் என்று பள்ளிகளுக்கு கேரள குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

There will be no 'Sir' or 'Madam' in schools, only 'Teacher: Kerala Child Rights Body
Author
First Published Jan 13, 2023, 2:16 PM IST

கேரள பள்ளிகளில் இனிமேல் மாணவர்கள் ஆசிரியர்களை சார் மற்றும் மேடம் என்று குழந்தைகளை கூப்பிட வற்புறுத்தக்கூடாது, பொதுவாக டீச்சர் என்ற வார்த்தையை பயன்படுத்தலாம் என்று பள்ளிகளுக்கு கேரள குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் கே.வி.மனோஜ் குமார், உறுப்பினர்கள் சி விஜயகுமார் ஆகியோர் நேற்று கேரள கல்வித்துறைக்கு உத்தரவிட்டனர். 

:நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31ல் தொடக்கம்: 66 நாட்கள் நடக்கிறது

கேரள குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட உத்தரவில், “ டீச்சர் என்ற வார்த்தை பாலின சமத்துவத்தை, வேறுபாட்டை வெளிப்படுத்தாத வார்த்தையாகும். ஆனால், சார் மற்றும் மேடம் என்பது பாலினத்தை வேறுபடுத்துவதாக இருக்கிறது.

 ஆதலால், பள்ளிகளில் குழந்தைகளை ஆசிரியர்களை சார் என்றும் மேடம் என்று மாணவர்களை அழைக்கும்படி கட்டாயப்படுத்த வேண்டாம். அதற்குப் பதிலாக ஆசிரியர்களை பொதுவாக டீச்சர் என்றே அழைக்கலாம்.

இது தொடர்பாக கேரள கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை வெளியிட்டு ஆசிரியர்களை டீச்சர் என அழைக்க அறிவுறுத்தலாம். சார் மற்றும் மேடம் என்ற வார்த்தைக்கு பதிலாக டீச்சர் என்ற வார்த்தையை குழந்தைகள் பயன்படுத்தும்போது, சமத்துவத்தை பராமரிக்க முடியும். குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு இடையே இயல்பாகவே நெருக்கம் அதிகரிக்கும். 

வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை; வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பெண் ஆசிரியரை மேடம் என்றும் ஆண் ஆசிரியரை சார் என்றும் பாலினப் பாகுபாட்டுடன் மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் அழைக்கிறார்கள். இந்த பாலினபாகுபாட்டை பள்ளியிலேயே முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சார், மேடம் என்ற வார்த்தையை நீக்கக் கோரி பொதுநலன் மனு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது


 

Follow Us:
Download App:
  • android
  • ios