வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை; வங்கி ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

ஓய்வூதியம், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி வருகின்ற 30, 31ம் தேதிகளில் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Bank staff to strike work on Jan 30 31

வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பான யுனைடெட் போரம் ஆப் பேங்க் யூனியன் சார்பில் மும்பையில் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், வாரத்தில் 5 நாட்கள் மட்டும் பணி, ஓய்வூதியம் புதுப்பித்தல், எஞ்சிய பிரச்சினைகள், தேசிய ஓய்வூதிய முறையை ரத்து செய்தல், ஊதிய உயர்வு கோரிக்கைகள் மீதான பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்குதல், போதுமான ஆட்சேர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த கோரிக்கைகளுக்கு இந்திய வங்கிகள் சங்கத்திடம் இருந்து தற்போது வரை எந்தவித பதிலும் வராததால் போராட்டத்தை மீண்டும் தொடங்குவதாக தெரிவித்துள்ளனர். அதன்படி வருகின்ற 30, 31 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் உடனடியாக செய்ய வேண்டும்: முக்கியமான அறிவிப்பு!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios