எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் உடனடியாக செய்ய வேண்டும்: முக்கியமான அறிவிப்பு!
எஸ்பிஐ வங்கி பயனாளர்கள் வாரிசுதாரர் பெயரை கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும் என்று SBI வங்கி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியாக எஸ்பிஐ கருதப்படுகிறது. அரசின் வரவு செலவு கணக்குகள் கூட இந்த வங்கியில் தான் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் எஸ்பிஐயின் கிளைகள் உள்ளன. இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். வங்கி துறையில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் வந்து கொண்டே இருக்கின்றன. அப்படி வரும் தொழில் நுட்ப வசதிகள் வங்கி சேவைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றன. முன்பெல்லாம் பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்றால் வங்கிக்கு தான் செல்ல வேண்டும். ஆனால், இப்போதெல்லாம், கையில் மொபைல் இருந்தாலே போதும். அதன் மூலமாக பணப்பரிவர்த்தனை எளிதாக செய்து கொள்ளலாம்.
Asianet Tamil News Live:அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை முதல்வர் அறிவிப்பு
சர்வ சாதாரணமாக பெட்டி கடைகளில் கூட யுபிஐ சிஸ்டம் வந்துவிட்டது. ஆன்லைன், மொபைல் மூலம் வங்கி சேவை தற்போது ஒரு படி மேலே சென்று வாட்ஸ் அப் மூலமாக பலவிதமான சேவைகளை நாம் பெற முடியும். எஸ்பிஐ 9 வங்கி சேவைகளை வாட்ஸ் அப் மூலமாக கொடுத்து வருகிறது. இப்படி கையிலேயே அக்கவுண்ட் பற்றி தெரிந்து கொள்ளும் வசதி வந்துவிட்டது.
இந்த நிலையில், எஸ்பிஐ வங்கி தனது வங்கி பயனாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது வாரிசுதாரர் பெயரை கண்டிப்பாக பதிவு செய்திருக்க வேண்டும் என்று எஸ்பிஐ வங்கி சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி பதிவு செய்யவில்லை என்றால், எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடக்கும் சமயத்தில் அந்தப் பணம் யாருக்கும் பயன்படாமல் வங்கி கணக்கில் சேர்ந்து விடும். வாரிசுதாரர் (நாமினி - Nominee) பெயர்களை சேர்க்க எஸ்பிஐ 3 விதமான வழிகளை பின்பற்றுகிறது. நெட் பேக்கிங் மூலமாக நாமினி பெயரை சேர்க்கலாம். யோனோ அப்ளிகேஷன் மூலமாக நாமினி பெயரை சேர்த்துக் கொள்ளலாம். கடைசியாக வங்கிக்கே நேரில் சென்று நாமினி (வாரிசுதாரர்) பெயரை சேர்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மறக்க முடியுமா ஹிட் மேனின் 264 ரன்கள்: 9 ஆண்டுகளுக்கு முன்பு ரோகித் சர்மா ஆடிய ருத்ர தாண்டவம்!