உத்தரபிரதேசம் பிஜ்னோர் மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.
உத்தரபிரதேசம் பிஜ்னோர் மாவட்டத்தில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. உத்தரபிரதேசம் பிஜ்னோர் மாவட்டத்தில் செருப்பு கடையின் முன் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் ஒன்று திடீரென தானாக ஸ்டார்ட் ஆகி கடையின் மீது மோதியது. ஷோரூமின் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளில், அருகில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக முன்னோக்கிச் சென்று, பல மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கடையின் கண்ணாடி கதவுகளை உடைத்தது.
இதையும் படிங்க: இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு.... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!
இதனால் குழப்பம் ஏற்பட்டதையடுத்து, கடையின் உள்ளே இருந்த ஊழியர்கள் டிரைவர் இல்லாத டிராக்டரை மேலும் சேதப்படுத்தாமல் தடுக்க முயன்றனர். இருந்தபோதிலும் டிராக்டர் தொடர்ந்து நகர்ந்து, கடையின் கண்ணாடி கதவை உடைத்தது. இந்த நிலையில் கடையின் உள்ளேயிருந்த ஒருவர் வேகமாக வாகனத்தை நிறுத்தியதை அடுத்து டிராக்டர் நின்றது. அந்த டிராக்டர் எப்படி ஸ்டார்ட் ஆனது என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இதையும் படிங்க: பைனாகுலர் வச்சு பார்த்தாலும் காங்கிரஸை காணோம்... அமித் ஷா விமர்சனம்!!
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அந்த டிராக்டர் கிஷன் குமார் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இருந்தபோதிலும் டிராக்டர் தானாக ஸ்டார்ட் ஆனது எப்படி என்பது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து நெட்டிசன்களும் காட்சிகளை கண்டு டிராக்டர் தானாக ஸ்டார்ட் ஆனது எப்படி என குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
