Asianet News TamilAsianet News Tamil

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு.... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை அடுத்து விருப்பமும் தகுதியும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

job vacancy in sports authority of india and here the details about how to apply
Author
First Published Mar 3, 2023, 8:59 PM IST

இந்திய விளையாட்டு ஆணையத்தில் (SAI) காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை அடுத்து விருப்பமும் தகுதியும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்: 

பதவி: 

  • Junior Consultant 

காலிப்பணியிடம்: 

  • Junior Consultant - 01

கல்வித் தகுதி: 

  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BE, B.Tech, LLB, CA, ICWA, MBBS, PGDM, Post Graduate Degree ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

இதையும் படிங்க: மனைவிக்காக 7 கோடி செலவு செய்து கோவிலை கட்டிய கணவர் - எல்லாம் எதற்கு தெரியுமா.? இதுக்கு தான்.!!

அனுபவம்: 

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

  • விண்ணப்பதாரர்கள் 40 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.80,250/- முதல் ரூ.1,00,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

இதையும் படிங்க: வெளியானது மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள்... 5.79 பேர் தேர்ச்சி!!

தேர்வு செய்யும் முறை: 

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிப்பது எப்படி? 

  • Junior Consultant பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://sportsauthorityofindia.gov.in/sai/public/assets/jobs/1677760916_JC%20P&M%20march%2001.pdf -க்கு சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து esttnis@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடைசி தேதி: 

  • 23.03.2023
Follow Us:
Download App:
  • android
  • ios