வெளியானது மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள்... 5.79 பேர் தேர்ச்சி!!
மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் 5.79 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் 5.79 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் நவோதையா, வித்யாலையா உள்ளிட்ட பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிவதற்காக மத்திய அரசால் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டன.
இதையும் படிங்க: டெல்லியை விட ராஜ்பவன் அருகில் உள்ளது; தெலுங்கானா தலைமைச் செயலாளருக்கு தமிழிசை சவுந்தரராஜன் டுவிட்டரில் பதில்!!
இந்த நிலையில் அந்த தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. அதன்படி, மொத்தம் 14 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ள நிலையில் முதல் தாள் தேர்வில் 5 லட்சத்து 79 ஆயிரத்து 844 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார். இரண்டாம் தாள் தேர்வில் 12 லட்சத்து 76 ஆயிரத்து 71 பேர் எழுதியதில் 3 லட்சத்து 76 ஆயிரத்து 25 பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகள் அதிகாரபூர்வ இணையதளமான http://ctet.net.in இல் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: மனைவிக்காக 7 கோடி செலவு செய்து கோவிலை கட்டிய கணவர் - எல்லாம் எதற்கு தெரியுமா.? இதுக்கு தான்.!!
தேர்வு முடிவுகளை பார்ப்பது எப்படி?
- அதிகாரப்பூர்வ இணையதளமான cbseresults.nic.in. அல்லது ctet.nic.in-க்கு செல்லவும்
- அதில் CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) DEC - 2022 என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- ஒரு புதிய பக்கம் திறக்கப்படும், அங்கு உங்களிடம் ரோல் எண் கேட்கப்படும்.
- ரோல் எண்ணை உள்ளிட்ட பிறகு, உங்கள் தேர்வு முடிவு திரையில் தோன்றும்.
- எதிர்காலத்திற்காக தேர்வு முடிவை பதிவிறக்கம் செய்துக்கொள்ளவும்.