பைனாகுலர் வச்சு பார்த்தாலும் காங்கிரஸை காணோம்... அமித் ஷா விமர்சனம்!!
வடகிழக்கு மாநிலங்களில் பைனாகுலார் வைத்து தேடினாலும் காங்கிரஸ் கட்சியை காணவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார்.
வடகிழக்கு மாநிலங்களில் பைனாகுலார் வைத்து தேடினாலும் காங்கிரஸ் கட்சியை காணவில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சனம் செய்துள்ளார். திரிபுரா, நாகலாந்து, மேகாலயா உள்ளிட்ட 3 மாநிலங்களின் தேர்தல் நடைபெற்றது. திரிபுராவில் கடந்த 16 ஆம் தேதியும் நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களில் கடந்த பிப்.27 ஆம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 3 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி, திரிபுரா மற்றும் நாகலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது.
இதையும் படிங்க: அனைத்து எம்.எல்.ஏக்களும் ஆரோக்கியமாக இருக்கணும்.. திமுகவை பங்கமாக கலாய்த்த அண்ணாமலை !
மேகாலயாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மேகாலயாவில் ஆளும் கட்சியான என்.பி.பி. கட்சி 26 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க. 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், 2 இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ளனர். இதனையடுத்து பாஜகவின் ஆதரவுடன் தேசிய மக்கள் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. இந்த நிலையில், மூன்று மாநில தேர்தல் முடிவு குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் காங்கிரஸ் துடைத்து எறியப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆளுநருடன் மோதல்? பொறுமைக்கும் எல்லை உண்டு - அமைச்சர் ரகுபதி தடாலடி
பைனகுலார் கொண்டு தேடிப்பார்த்தாலும் காங்கிரஸ் காண முடியாத அளவுக்கு வடகிழக்கில் காங்கிரஸ் படு அவமானகரமான தோல்வியை சந்தித்துள்ளது. திரிபுராவில் நான்கு இடங்களும், மேகாலயாவில் மூன்று இடங்களும் கிடைத்துள்ளன. நாகாலாந்தில் காங்கிரசுக்கு எதுவும் இல்லை. வடகிழக்கு, குஜராத், உத்தரப் பிரதேசம், கர்நாடகா என இந்தியாவில் எல்லா இடங்களிலும் மோடி மேஜிக் வேலை செய்யும் என்று தெரிவித்துள்ளார்.