இந்தியாவின் ஷாப்பிங் செய்வதற்கான சிறந்த தெருக்களின் (High Streets) பட்டியலில் பெங்களூருவின் எம்ஜி ரோடு முதலிடம் பிடித்துள்ளது. 

இந்தியாவின் ஷாப்பிங் செய்வதற்கான சிறந்ததெருக்களின் (High Streets) பட்டியலில் பெங்களூருவின் எம்ஜி ரோடு, முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதே நேரத்தில் பெங்களூருவின் 4 இடங்கள், முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளன. அந்த வகையில் சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் சிறந்த சாலைகளை கொண்டதாக பெங்களூரு கருதப்படுகிறது. உலகளாவிய ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான நைட் ஃபிராங்க் நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

எம்.ஜி சாலையை தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள சோமாஜிகுடா மற்றும் மும்பையின் லிங்க்கிங் சாலை ஆகியவை முறையே 2, 3 ஆகிய இடங்களை பிடித்துள்ளன. டெல்லியில் சவுத் எக்ஸ்டென்ஷன் (பாகம் 1 மற்றும் பகுதி 2) நான்காவது இடத்தைப் பிடித்தது. கொல்கத்தாவின் பார்க் ஸ்ட்ரீட் மற்றும் கேமாக் ஸ்ட்ரீட் ஐந்தாவது இடத்திலும், சென்னையின் அண்ணாநகர், பெங்களூருவின் கமர்ஷியல் ஸ்ட்ரீட், நொய்டாவின் செக்டர் 18 மார்க்கெட், பெங்களூரின் பிரிகேட் ரோடு மற்றும் பெங்களூரின் சர்ச் ஸ்ட்ரீட் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இதையும் படிங்க : உலகின் பணக்கார அரச குடும்பம் எது தெரியுமா? கண்டிப்பா இங்கிலாந்து அரச குடும்பம் இல்லை..

நவீன சில்லறை விற்பனை நிலையங்களில் பெங்களூரு அதிக விகிதத்தில் (67%) உள்ளது. 66% சில்லறை விற்பனை பரப்புடன் சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது. சமகால சில்லறை விற்பனை நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், கொல்கத்தா மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் முறைசாரா கடைகள் அதிகமாக உள்ளன என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், எம்ஜி ரோடு (பெங்களூரு), சோமாஜிகுடா (ஹைதராபாத்), லிங்க்கிங் ரோடு (மும்பை), அண்ணாநகர் (சென்னை), பார்க் ஸ்ட்ரீட், மற்றும் கேமாக் ஸ்ட்ரீட் (கொல்கத்தா) ஆகியவை அதிக மதிப்பெண் பெற்றன.

அகமதாபாத் மற்றும் புனேவில் சிறந்த 10 சிறந்த தெருக்களில் ஒரு இடம் கூட இடம்பெறவில்லை. இந்த சிறந்த ஷாப்பிங் தெருக்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் அனுபவத்தின் தரத்தை நிர்ணயிக்கும் அளவுருக்களின் அடிப்படையில், இந்தியாவின் முதல் 8 நகரங்களில் உள்ள 30 ஹை ஸ்டிரீட்களில் இந்தகணக்கெடுப்பு நடத்தப்பட்டது. உயர் தெருக்கள் வழங்கும் வாடிக்கையாளர் அனுபவத்தின் திறனை நிறுவும் காரணிகளின் அடிப்படையில் சந்தை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி முதல் 10 உயர் தெருக்கள் எளிதில் அணுகக்கூடியவை, பார்க்கிங் வசதி மற்றும் பரந்த அளவிலான வணிகர்கள் உள்ளனர் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க : Paytm Lite : இனி ஐபோன் பயனர்கள் UPI PIN இல்லாமல் பணம் செலுத்தலாம்.. எப்படி தெரியுமா?