உலகின் பணக்கார அரச குடும்பம் எது தெரியுமா? கண்டிப்பா இங்கிலாந்து அரச குடும்பம் இல்லை..

உலகின் பணக்கார அரச குடும்பங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.

Do you know which is the richest royal family in the world? Definitely not the royal family of England..

3-ம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக அதிகாரப்பூர்வமாக முடிசூட்டப்பட்டார். இங்கிலாந்து அரச குடும்பத்தின் பெரும் செல்வம் மற்றும் முடிசூட்டு விழாவிற்கு செலவழிக்கப்பட்ட அதிகப்படியான பணம் ஆகியவை சமூக வலைதளங்களில் விவாதப் பொருளானது. இங்கிலாந்தின் அரச குடும்பம் பெரும் செல்வத்தையும் பெரும் நிகர மதிப்பையும் கொண்டிருந்தாலும், உலகின் பணக்கார அரச குடும்பம் இங்கிலாந்து அரசுக்குடும்பம் அல்ல என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் உண்மை தான். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அரச குடும்பங்கள் உலகின் பணக்கார அரச குடும்பங்களாக உள்ளன.

உலகின் பணக்கார அரச குடும்பம் எது?

லகின் பணக்கார அரச குடும்பம் சவுதி அரேபியாவின் அரச குடும்பம் தான்.  சவுதி அரச குடும்பம் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சொத்து மதிப்பு கொண்டது. மன்னர் சல்மான் பின் அப்துல்லாஜிஸ் அல் சவுத் தலைமையிலான சவூதி அரச குடும்பத்தில் 15,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர், அவர்களின் செல்வத்தின் பெரும்பகுதி நாட்டில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் கிணறுகளில் இருந்து வருகிறது.

இதையும் படிங்க : 2500 ஆண்டுகளுக்கு முந்தைய புத்த கொள்கைகள் இன்றும் பொருத்தமானவை; மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி கருத்து

சவூதி அரேபிய மன்னர் தற்போது அல் யமாமா அரண்மனை என அழைக்கப்படும் ஆடம்பரமான அரண்மனையில் 4 மில்லியன் சதுர அடி பரப்பளவில் வசித்து வருகிறார். சிறந்த ஆடம்பர பிராண்டு உடைகளை மட்டுமே அணியும் அரச குடும்பத்தினர், ஆடம்பரமான படகுகள், தனியார் விமானங்கள் மற்றும் விலையுயர்ந்த தங்க முலாம் பூசப்பட்ட கார் ஆகியவற்றை வைத்திருக்கிறார்கள்.

சவூதி அரேபியாவின் அரச குடும்பத்திற்குப் பிறகு, உலகின் இரண்டாவது பணக்கார அரச குடும்பம் குவைத்தில் உள்ளது, மொத்த குடும்பத்தின் மதிப்பு 360 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும், இது இந்திய மதிப்பில் ரூ. 2,95,39,98,00,00,000 ஆகும்.

மன்னர் மூன்றாம் சார்லஸ் தலைமையிலான இங்கிலாந்து அரச குடும்பம், 88 பில்லியன் அமெரிக்க டாலர்களின் மொத்த நிகர மதிப்புடன், உலகின் பணக்கார அரச குடும்பங்களில் 5 வது இடத்தில் உள்ளது

இங்கிலாந்து அரச குடும்பம் சமீபத்தில் முடிசூட்டு விழாவை நடத்தியது, அங்கு சார்லஸ் மன்னருக்கும் அவரது மனைவி கமிலா ராணிக்கும் முடிசூட்டப்பட்டது.. இந்த நிகழ்வில் இளவரசர் ஹாரியும் கலந்து கொண்டார், அவரது மனைவி மேகன் மார்க்லே கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : உலகின் மிகவும் பழமையான 7 மரங்கள் இவைதான்.. பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios