pfi: kerala harthal: harthal tomorrow: என்ஐஏ சோதனை: கேரளாவில் நாளை ஹர்தால் நடத்த பிஎப்ஐ அழைப்பு
கேரளா முழுவதும் நாளை ஹர்தால் நடத்த பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
கேரளா முழுவதும் நாளை ஹர்தால் நடத்த பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
நாட்டின் 11 மாநிலங்களில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அலுவலகங்களிலும், நிர்வாகிகள் வீடுகளிலும் தேசிய புலனாய்வு முகமை இன்று சோதனை நடத்தியதற்கு எதிராக கேரளா முழுவதிலும் அந்த அமைப்பினர் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டது.
என்ஐஏ ரெய்டில் பிஎப்ஐ நிர்வாகிகள் எந்தெந்த மாநிலத்தில் எத்தனை பேர் கைது? தமிழகத்தில் எத்தனை பேர்?
இதையடுத்து, கேரளாவில் காலை முதல் முதல் மாலை வரை ஹர்தால்(கடையடைப்பு) நடத்த பிஎப்ஐ அமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்
தீவிரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளித்தல், தீவிரவாதச் செயல்களுக்கான பயிற்சி அளிக்க முகாம் அமைத்தல், தீவிரவாத அமைப்புகளில் சேர்வதற்கு ஆட்களை மூளைச் சலவை செய்தல் ஆகியவற்றை பிஎப்ஐ அமைப்பும், அதன் நிர்வாகிகளும், எஸ்டிபிஐ கட்சியும் செய்துவருவதாக என்ஐஏ அமைப்புக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து, என்ஐஏ அமைப்பும், அமலாக்கப்பிரிவும் இணைந்து 11 மாநிலங்களில் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றன.
என்ஐஏ ரெய்டு: பிஎப்ஐ அமைப்புக்கு தடை வருமா?: அமித் ஷா முக்கிய ஆலோசனை
இந்த ரெய்டில் இதுவரை 100க்கும் மேற்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ரெய்டுக்கான உண்மையான காரணம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் தரப்பில் இதுவரை அதிகாரபூர்வ அறிக்கை ஏதும் வெளியாகவி்ல்லை.
இந்நிலையில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் பொதுச்செயலாளர் அப்துல் சத்தார் வெளியிட்ட அறிவிப்பில் “ எங்கள் அமைப்பின் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டிருப்பது அரசே பரப்பிவிடும் தீவிரவாதத்தின் ஒருபகுதியாகும். என்ஐஏ, அமலாக்கப்பிரிவு சோதனையைக் கண்டித்து,
ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் மத்திய அரசுக்கு எதிராகவும், எதிரப்புக் குரல்களை மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் அடக்குவதற்கு எதிராகவும் கேரளாவில் நாளை(23ம்தேதி) ஹர்தால் நடத்தப்படும். இந்த ஹர்தால் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை நீடிக்கும்”எனத் தெரிவிக்கப்பட்டது.
மோடிக்கு தூக்கு தண்டனை கிடைக்க தீஸ்தா செதல்வாத் சதிதிட்டம்: எஸ்ஐடி குற்றப்பத்திரிகை
என்ஐஏ சோதனையைக் கண்டித்து திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூரில் பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். என்ஐஏ அமைப்பின் இந்த ரெய்டு பெரும்பாலும் மாநில, மாவட்ட பிஎப்ஐ அலுவலகங்கள், நிர்வாகிகள் வீடுகள், பொறுப்பாளர்கள் வீடுகளில் நடந்தன. முதலில் அமலாக்ப்பிரிவு சோதனை என்று நினைத்தபின், அது என்ஐஏ என்பது தெரியவந்தது.
கேரளாவில் பிஎப்ஐ அமைப்பின் தேசிய, மாநில, மாவட்ட அளவிலான முக்கியத் தலைவர்களை என்ஐஏ அமைப்பினர் கைதுசெய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். பிஎப்ஐ மாநிலத் தலைவர் சிபி முகமது பசீர், தேசியத் தலைவர் ஓஎம்ஏ சலாம்,தேசிய செயலாளர் நஸ்ருதீன் இளமாறன் ஆகியோர் என்ஐஏ பாதுகாப்பில் உள்ளனர்.
கொச்சியில் உள்ள என்ஐஏ அலுவலகம் தவிர, பல்வேறு அலுவலகங்களுக்கும் கைது செய்யப்பட்டவர்களை என்ஐஏ அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர். திருச்சூரில் எஸ்டிபிஐ கட்சியின் தலைவர் அஷ்ரப் மவுலவி இல்லத்திலும் என்ஐஏ சோதனை நடந்தது.