திருடர்களின் டார்கெட் இப்ப தக்காளி தான்.. அடுத்தடுத்து நடந்த தக்காளி திருட்டு சம்பவங்கள்
தெலங்கானாவில் 20 கிலோ தக்காளி திருட்டுப்போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் நிலையில், தக்காளி திருட்டு சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் தெலங்கானா மாநிலம் மஹ்பூப்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள டோர்னகல் கிராமத்தில் உள்ள ஒரு காய்கறி விற்பனையாளரின் கடையில் இருந்து கிட்டத்தட்ட 20 கிலோ தக்காளி மற்றும் 5 கிலோ பச்சை மிளகாய்களை திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
பி.பிரகாஷ் என்ற விற்பனையாளர் நேற்று மதியம் புறப்படுவதற்கு முன் காந்தி சௌக் காய்கறி சந்தையில் உள்ள கியோஸ்க்கில் ரூ.2,400 மதிப்புள்ள தக்காளி மற்றும் ரூ.490 மதிப்புள்ள பச்சை மிளகாய்களை பாலித்தீன் தாளால் மூடி விட்டுச் சென்றுள்ளார். இருப்பினும், அவர் திரும்பி வந்தபோது, தக்காளி பச்சை மிளகாய்கள் திருடப்பட்டதைக் கண்டுபிடித்தார். இந்த சம்பவம் குறித்து பிரகாஷ் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழங்குடி மாணவி எடுத்த கண்கவர் புகைப்படம் Vogue Italia இதழில் இடம்பிடித்தது அசத்தல்!
இதே போல் மற்றொரு சம்பவத்தில், கர்நாடக மாநிலம் ஹவேலி மாவட்டத்தில் உள்ள ஹோங்கல் கிராமத்தில் மலப்பா என்ற விவசாயியின் பண்ணையில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள தக்காளியை திருடர்கள் திருடி சென்றனர். இதை அறிந்த மலப்பா உடனடியாக உள்ளூர் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாக, மாலப்பா தனது பண்ணையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க முடிவு செய்தார். மேலும் கண்காணிப்பை மேம்படுத்தவும் எதிர்கால நிகழ்வுகளைத் தடுக்கவும் தனது பண்ணை வீட்டில் 6 CCTV கேமராக்களை நிறுவினார்.
இந்தியா முழுவதும் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் இந்த திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. நாட்டின் சில பகுதிகளில் தக்காளி கிலோ 100 முதல் 120 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பல மாநிலங்களில் தக்காளி மட்டுமின்றி மற்ற காய்கறிகளின் விலையும் உயர்ந்து வருகிறது. பருவமழை பொய்த்ததால் உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில் பயணத்தின் புதிய சகாப்தம் : மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..