பிரதமர் மோடி கோரக்பூரில் இருந்து மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்க உள்ளார்.
வடகிழக்கு இந்தியாவின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் கவுகாத்தி மற்றும் நியூ ஜல்பைகுரி இடையே புதன்கிழமை தொடங்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவின் மேலும் 2 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். உத்தரபிரதேசத்தில் உள்ள கோரக்பூரில் இருந்து இந்த ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று, வெள்ளிக்கிழமை உத்தரபிரதேசத்திற்கு செல்கிறார். கோரக்பூர்-லக்னோ பந்தே மற்றும் ஜோத்பூர்-சபர்மதி பந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் சேவையை நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இதன் மூலம் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கை 25-ஆக உயர்ந்துள்ளது.
வந்தேபாரத் திறமையான ரயில் பயணத்தின் புதிய சகாப்தத்தை வரையறுக்கிறது என்றும், ஒவ்வொரு புதிய பாதையிலும் வரலாறு படைக்கப்படுவதை காண முடிகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் “ ஒரு வழித்தடத்தில் வந்தே பாரத் ரயிலை இயக்க சராசரியாக 2 மாதங்கள் ஆகும். அதே நேரத்தில், சதாப்தி எக்ஸ்பிரஸ் ஒரு வழித்தடத்தில் தொடங்க 1.6 ஆண்டுகள் மற்றும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் தொடங்க 2.16 ஆண்டுகள் ஆகும். வந்தே பாரத் ரயில், வேகமான ரயில் பயணத்தின் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்துகிறது.” என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோரக்பூர்-லக்னோ மற்றும் ஜோத்பூர்-அகமதாபாத் (சபர்மதி) வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களைகோரக்பூர்-லக்னோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அயோத்தி வழியாக செல்லும். இது மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கான இணைப்பை மேம்படுத்துவதோடு, சுற்றுலாவையும் மேம்படுத்தும். ஜோத்பூர்-சபர்மதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஜோத்பூர், அபு சாலை மற்றும் அகமதாபாத் போன்ற புகழ்பெற்ற இடங்களுக்கான இணைப்பை மேம்படுத்தும். மேலும் இதன் மூலம் அப்பகுதியில் சமூக-பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சந்திரயான் 3.. விண்ணில் பாய உள்ள இந்தியாவின் கனவுத்திட்டம் - ISRO கொடுத்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ!
