சந்திரயான் 3.. விண்ணில் பாய உள்ள இந்தியாவின் கனவுத்திட்டம் - ISRO கொடுத்த அதிகாரப்பூர்வ தகவல் இதோ!
விண்ணில் ஏவப்படும் சந்திரயான் 3, GSLV மார்க் 3 ரக ராக்கெட் கொண்டு ஏவப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் பல்வேறு நாடுகள் தற்பொழுது விண்வெளி துறையில் தொடர்ச்சியாக பல ஆய்வுகளை செய்து வருகின்றது. விண்வெளி துறையை பொறுத்தவரை முக்கியமான நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. குறிப்பாக ISROவின் செயல்திறன் உலக நாடுகளின் கவனத்தை தொடர்ந்த ஈர்த்து வருகின்றது.
இந்நிலையில் சந்திரயான் 3 குறித்த ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது, தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி ஜூலை 14ம் தேதி மதியம் 2.35 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும், GSLV மார்க் 3 ரக ராக்கெட் கொண்டு இது விண்ணில் ஏவப்படவுள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2008ம் ஆண்டில் சந்திரயான் 1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது, அதன் பிறகு சந்திரயான் 2 கடந்த 2019ம் ஆண்டு ஏவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரயான் 3 ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள SCDC என்று அழைக்கப்படும் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து மேற்குறிப்பிட்ட நாளில் சரியான நேரத்தில் ஏவப்பட உள்ளது.
பூமியை ஆய்வு செய்ய அனுப்பப்படும் இந்த சந்திரயான் 3 மிக மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பூமியிலிருந்து சுமார் 3.86 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நிலவுக்கு, இந்த சந்திரயான் 3ஐ அனுப்பும் பணிகள் தற்பொழுது படு வேகமாக நடந்து வருகிறது.
முன்னதாக இந்த ஜூலை 13ம் தேதி சந்திரயான் 3 ஏவப்படும் என்றும், அது ஜூலை 19ம் தேதி வாக்கில் நிலவுக்கு சென்று சேரும் என்று ISRO தெரிவித்தது. அதே போல ஜூலை 12ம் தேதி முதல் 19ம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் நிலவுக்கு ராக்கெட்டை அனுப்புவது சரியாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இறுதியாக ஜூலை 14ம் தேதி மதியம் 2.35 மணிக்கு சந்திரயான் 3, இந்தியாவின் கனவு திட்டம் விண்ணில் பாயும்.
இதையும் படியுங்கள் : OPS மகன் ரவீந்திரநாத் வெற்றி செல்லாது - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!