Asianet News TamilAsianet News Tamil

இன்று வங்கிகள் செயல்படாது !! பணிகள் பாதிப்பு !! வாடிக்கையாளர்கள் திணறல் !!

9 வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் இன்று  வேலை நிறுத்தம் நடைபெறுவதால் வங்கிகள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏடிஎம்ல் பணம்  நிரப்பும் பணிகளும் பாதிக்கப்பட்டுளளது.

today banks strike
Author
Chennai, First Published Dec 26, 2018, 7:11 AM IST

ஊதிய உயர்வு, வங்கிகள் இணைப்பைக் கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும்  வங்கி அதிகாரிகள் கடந்த 20-ம் தேதி ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், வாடிக்கையாளர்களுக்கான வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டன. சென்னை மட்டுமின்றி புறநகர் பகுதிகளிலும் வங்கி சேவைகள் பாதிப்படைந்தன. 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வங்கிகளுக்கு ரெகுலர் விடுமுறை என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படவில்லை.

இதையடுத்து திங்கட்கிழமை ஒரு நாள் மட்டும் வங்கிகள் இயங்கின.நேற்று கிருஸ்துமஸ் என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தன.

today banks strike

இந்தநிலையில் 26-ம் தேதியான இன்று  ஒன்பது வங்கிகளின் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

பேங்க் ஆஃப் பரோடா, தேனா வங்கி, விஜயா வங்கி ஆகிய வங்கிகளையும் ஒன்றாக இணைக்கக் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இந்த வங்கி இணைப்பைக் கண்டித்து வங்கிகள் அனைத்தும் இன்று வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன. இதனால் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணிகள் பாதிக்கப்படும் என்பதால் பணத்தட்டுப்பாடு ஏற்படலாம் எனத் தெரிகிறது.

இந்த வேலை நிறுத்தத்தில் 3.2 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 வங்கி யூனியன் சார்பில் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளதால் வங்கிகள் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 6 நாட்களாகவே அடுத்தடுத்து வங்கிப் பணிகள் முடங்கி வாடிக்கையாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்

Follow Us:
Download App:
  • android
  • ios