Asianet News TamilAsianet News Tamil

அட கடவுளே.. கொரோனாவால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வந்த சோதனையை பாருங்க..?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் 160 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

tirupati temple...160 employees test positive for coronavirus
Author
Tirupati, First Published Jul 17, 2020, 4:34 PM IST

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பணிபுரியும் 160 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,602 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த நோயாளிகள் எண்ணிக்கை  40,646ஆக உயர்ந்துள்ளது. 19,814 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 20,298  பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளனர். கடந்த  24 மணி நேரத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 534ஆக உயர்ந்துள்ளது. 

tirupati temple...160 employees test positive for coronavirus

இந்நிலையில், திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- திருமலையில் ஏழுமலையான் கோவில் உள்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஆந்திர மாநில காவல் துறையை சேர்ந்த சிறப்புப் போலீசாரில் 60 பேருக்கும், திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை பிரிவில் பணியாற்றி வரும் ஊழியர்களில் 16 பேருக்கும், லட்டு தயாரிப்பு மற்றும் வினியோகத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் 14 பேருக்கும், ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் என 70 பேருக்கும் ஆக மொத்தம் 160 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

tirupati temple...160 employees test positive for coronavirus

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மொத்தம் 40 அர்ச்சகர்கள் உள்ளனர். அதில் 14 அர்ச்சகர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் திருமலையில் உள்ள அர்ச்சகர்கள் பவனில் தனித்தனி படுக்கையில் தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அர்ச்சகர்கள், ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டாலும் பக்தர்கள் தொடர்ந்து தரிசனம் மேற்கொள்ள வருகை தரலாம் என திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios