திருப்பதி
திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் உள்ள கிருத்திகா என்ற பெண் புலி மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.
திருப்பதி அலிபிரியில் உள்ள, ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் பிறந்து வளர்ந்து வரும், புலி கிருத்திகா. இந்த புலி நேற்று முன்தினம் மூன்று குட்டிகளை ஈன்றது.
இந்த புலி குட்டிகள், நேற்று கண் திறந்தன. இதைக்காண, மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், 'தாய் புலி மற்றும் குட்டி புலிகளின் நலன் கருதி, புலிக் குட்டிகளை காண சில கட்டுப்பாடுகளை வித்தித்துள்ளது பூங்கா. அந்த மூன்று குட்டிகளும் கட்டிப் பிடித்து விளையாடி வருவதைக் கண்டு சிறுவர் முதல் பெரியவர் வரை மகிழ்ச்சி அடைகின்றனர்.
