அபிநந்தன் இந்தியா திரும்பிவிட்ட நிலையில்., ட்விட்டரில் பிரபங்களின் வாழ்த்து மழையால்  #Abhinandan, #WelcomeHomeAbhinandan என்ற ஹாஷ்டேக்குகள் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றன. 

இந்நிலையில் அபிநந்தனை வாழ்த்தி பிரபலங்களும் ட்விட்டரில் கருத்துகளை பதிவிட்டனர். அபிநந்தன் தாய் நாடு திரும்பியது தொடர்பாக பிரபலங்கள் ட்விட்டரில் பதிந்த கருத்துகளின் தொகுப்புகளைப் பார்ப்போமா? 

முகமது கைஃப்: கடினமான சூழலில் கண்ணியத்துடன், நயத்துடன், தைரியமாக அபிநந்தன் நடந்துகொண்டது பெருமையாக உள்ளது. நீங்கள் வீடு திரும்பியதில் மிக்க மகிழ்ச்சி. #WelcomeHomeAbhinandan

வீரேந்தர் சேவாக்: நீங்கள் எங்களுடன் இருப்பதில் எங்களுக்கு  பெருமை. உங்கள் திறமைக்கு தலை வணங்குகிறேன். உங்கள் வலிமை மற்றும் தைரியத்துக்கு உங்களை நேசிக்கிறோம். உங்களால் எங்களுக்குள் பெருமை நிறைந்துள்ளது. #WelcomeHomeAbhinandan

வி.வி.எஸ்.லட்சுமண்: ஒட்டுமொத்த தேசமும் உங்கள் சுயநலமின்மை, தைரியம் மன உறுதியால் பெருமைகொண்டுள்ளது. #WelcomeHomeAbhinandan 

ப்ரீத்தி ஜிந்தா:  65 வருட பழைய ரஷ்யாவின் மிக்21 விமானம், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்ட எஃப்15 விமானத்தை இந்தியா பாக் எல்லையில் சுட்டு வீழ்த்தியதைக் கண்டு அமெரிக்க மக்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இது விமானி பயிற்சியைப் பற்றி நிறைய சொல்கிறது. சிறந்த விமானி ஓட்டுவதுதான் சிறந்த விமானம். #WelcomeHomeAbhinandan #RealHero 

தமன்னா: உங்கள் அமைதி மற்றும் பொறுமைக்கு தலை வணங்குகிறோம் அபிநந்தன். நீங்கள் எப்போதும் தைரியமாக இருந்தீர்கள். #WelcomeHomeAbhinandan

ஹன்சிகா: இந்த மனிதரின் மன தைரியத்துக்காக தலை வணங்குங்கள். #WelcomeHomeAbhinandan

ரவீனா தண்டன்: நமது நாயகன் வீடு திரும்புவதைப் பார்க்க தொலைக்காட்சி திரையை விட்டு கண்கள் அகலவில்லை. அவ்வளவு பிரச்னைகளுக்கு நடுவிலும் நீங்கள் அமைதியாக இருந்த விதம், மரியாதைக்குரிய வகையில் நடந்து கொண்ட விதம் இதையெல்லாம் பார்க்கும்போது உங்கள் தைரியத்தைப் பற்றித் தெரிகிறது. அவ்வளவு பெருமையாக உணர்கிறேன். வரவேற்கிறோம் விங் கமாண்டர். #WelcomeHomeAbhinandan.

ரிஷப் பந்த்: வரவேற்கிறோம் அபிநந்தன் அவர்களே. நம் தேசம் மொத்தமும் உங்கள் சுயநலமின்மை மற்றும் மனதைரியத்தைக் கண்டு பெருமைபடுகிறது. உங்களை வணங்குகிறோம். ஜெய்ஹிந்த். #WelcomeHomeAbhinandan

பிரகாஷ்ராஜ்: #WelcomeHomeAbhinandan #Abhinandancomingback. அரசியல்வாதிகள் அரசியலாக்கட்டும். ஊடகங்களை கூரைக்கு மேல் ஏறி நின்று அலறட்டும். ஆனால் குடிமக்களாக நாம் ஒற்றுமையுடன் நின்று நமது நாயகனை வரவேற்போம்.

பிரித்விராஜ்: இந்த தேநீர் அற்புதமாக உள்ளது. ஆனால் நான் அதை உங்களிடம் சொல்ல முடியாது. மீண்டும் வருக சார். ஜெய்ஹிந்த்.

கெளதம் அதானி: ஒவ்வொரு இந்திய ராணுவ வீரரிடமும் இருக்கும் தைரியம், அமைதி மற்றும் அர்ப்பணிப்பை இந்தியா மற்றும் உலகத்திலுள்ள மில்லியன் கணக்கான மக்கள் பார்க்க வாய்ப்பு கிடைத்துள்ளது. #WelcomeHomeAbhinandan