ரம்ஜான் நாளில் இந்த நகரத்தில் அதிக பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாம்.. Swiggy ரிப்போர்ட்..
பிரபல உணவு விநியோக நிறுவனமான Swiggy இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையின் போது தனது வாடிக்கையாளர்களால் ஆர்டர் செய்யப்பட்ட மிகவும் பிரபலமான இப்தார் உணவுகள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ரமலான் உள்ளது. இஸ்லாமிய காலண்டரின் 9வது மாதத்தில் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ரம்ஜான் பண்டிகை நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
ரம்ஜான் பண்டிகையில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. புனித ரமலான் மாதத்தில் ஒவ்வொரு நாளும், இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பார்கள். பின்னர் இஃப்தார் உணவுடன் நோன்பை முடித்துக் கொள்வது வழக்கம்.
Health Tips : இந்த உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடாதீங்க! அதிர்ச்சி விளைவுகள்!!
இந்த நிலையில் பிரபல உணவு விநியோக நிறுவனமான Swiggy இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகையின் போது தனது வாடிக்கையாளர்களால் ஆர்டர் செய்யப்பட்ட மிகவும் பிரபலமான இப்தார் உணவுகள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
Swiggy அறிக்கையின்படி, இந்தியாவில் ரம்ஜான் 2024 முழுவதும் 6 மில்லியன் பிளேட் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டது. இது வழக்கமான மாதங்களுடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் அதிகமாகும்.
ரம்ஜான் 2024ல் பிரியாணியை அதிகம் ஆர்டர் செய்த நகரம் எது?
அதிக பிரியாணி நுகர்வு கொண்ட நகரமாக ஹைதராபாத் உருவெடுத்துள்ளது. 5.3 லட்சம் ஹலீம் பிளேட்களுடன் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரியாணி விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ரம்ஜான் பண்டிகையின் போது மாலை 5:30 முதல் 7 மணி வரை இஃப்தர் ஆர்டர்களில் குறிப்பிடத்தக்க 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஸ்விகி தெரிவித்துள்ளது.
மிகவும் விரும்பப்படும் உணவுப் பொருட்கள்
நாடு முழுவதும், இந்த காலகட்டத்தில் அதிகம் விரும்பப்படும் உணவுப் பொருட்களில் சிக்கன் பிரியாணி, மட்டன் ஹலீம், சமோசா, ஃபலூடா மற்றும் கீர் ஆகியவை அடங்கும்.
ரம்ஜான் மாதத்தில் நாடு முழுவதும் பாரம்பரிய உணவு வகைகளுக்கான ஆர்டர்கள் கணிசமாக அதிகரித்துள்ளன என்பதையும் Swiggy வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றனர். ஹலீமுக்கான ஆர்டர்கள் 1455 சதவிகிதம் உயர்ந்தன, அதைத் தொடர்ந்து பிர்னிக்கான ஆர்டர்கள் 81 சதவிகிதம் மற்றும் மல்புவாவிற்கு 79 சதவிகிதம் அதிகரித்தது.
Pomegranate Juice : தினமும் ஒரு கிளாஸ் 'மாதுளை ஜூஸ்' குடித்து வந்தால் என்ன நடக்கும் தெரியுமா..?
குறிப்பாக மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, போபால் மற்றும் மீரட் போன்ற நகரங்களில் இப்தாருக்கான இனிப்பு உணவுகள் அதிகமாக ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.