Asianet News TamilAsianet News Tamil

இன்று முதல் ஊரடங்கில் தளர்வு..! என்னென்ன பணிகள் செய்ய அனுமதி தெரியுமா மக்களே..?

இன்று முதல் இந்தியாவில் ஊரடங்கில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக சில கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. 

things that can be done in lockdown exception places
Author
New Delhi, First Published Apr 20, 2020, 8:29 AM IST

இந்தியாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறுவதை தடுக்கும் வகையில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்க வலியுறுத்தி கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருக்கிறது. 21 நாட்கள் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில் மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி மே 3ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. எனினும் ஏப்ரல் 20ம் தேதி முதல் கொரோனா வைரஸின் தாக்கம் குறைவாக இருக்கும் பகுதிகளில் ஊரடங்கில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அங்கு மக்கள் சில பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. அவற்றை மாநில அரசுகள் கலந்தாலோசித்து முடிவு செய்யும் என மத்திய அரசு அறிவித்தது.

things that can be done in lockdown exception places

அதன்படி இன்று முதல் இந்தியாவில் ஊரடங்கில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் மக்கள் சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக சில கட்டுப்பாடுகளுடன் தளர்வுகள் மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. அந்த வகையில் இன்று முதல் செயல்பாட்டிற்கு வரும் சேவைகள், தொழில்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அவை பின் வருமாறு:

 1.ஆயுஷ் உள்ளிட்ட மருத்துவ சேவைகள்

2.வேளாண் மற்றும் தோட்டத் தொழில்கள்

3.தேயிலை, காப்பி, ரப்பர் தோட்டத் தொழில்கள்.

4.மீன்பிடித் தொழில்

5.நிதித்துறை மற்றும் சமூக நலத்துறை

6.தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்

7.மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான சரக்கு போக்குவரத்து

8.பொது வினியோகத்துறை

9.ஆன்லைன் மூலம் கற்பித்தல் மற்றும் தொலைதூர கல்வி

10.அத்தியாவசிய பொருட்கள் வினியோகித்தல்

11.வர்த்தகம், தனியார் நிறுவனங்கள் கட்டுப்பாடுகளுடன் இயங்கலாம்.

12.அவசர தேவைக்கான கட்டிட தொழில்கள்

13.தனியார் வாகனங்களை மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைக்காக மட்டும் இயக்கலாம்.

14. மத்திய, மாநில, யூனியன் பிரதேச அலுவலகங்கள்

இவை அனைத்திலும் மக்கள் சமூக விலகலை கடைபிடித்து முகக் கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்து செயல்பட அரசு அறிவுறுத்தி இருக்கிறது. கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் இடங்களில் ஊரடங்கு தளர்வுகள் பொருந்தாது எனவும் மத்திய அரசு கூறியிருப்பது குறிப்பிடத்ததக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios