பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10% இடஒதுக்கீடு என்ற சட்ட திருத்தத்தை எதிர்த்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் 5 நீதிபதிகளில் 3 நீதிபதிகள் முன்னேறிய வகுப்பினருக்கான 10% இடஒதுக்கீட்டை உறுதி செய்தனர். இதனையடுத்து பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
10% இட ஒதுக்கீடு தீர்ப்பு
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குய சட்ட திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரவீந்திர பட், பீலா திரிவேதி, ஜே.பி.பர்திவாலா அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது
நீதிபதி தினேஷ் மகேஸ்வரி கூறுகையில் இந்த 10% ஒதுக்கீடு வழங்கியது அடிப்படை அரசியல் சாசன கட்டமைப்பை மீறுகிறதா ? என கேள்வி எழுகிறது ஆனால் இந்த சட்ட திருத்தம் அடிப்படை அரசியல் சாசனத்தை மீறவில்லை. வளர்ச்சி என்பது அனைவருக்கும் ஒருமித்த வளர்ச்சியாக இருக்க வேண்டும் மேலும் இடஒதுக்கீடு முறை 50சதவீதத்திற்கு மேலாக இருக்கக்கூடாது என்பதை மீறவில்லை. ஏனெனில் இந்த இடஒதுக்கீடு பொருளாதார அடிப்படையில் வழங்கப்படுவதால்., எந்த அடிப்படை கட்டமைப்புகளையும் மீறவில்லை. இடஒதுக்கீடு என்பது சமமான சமுதாயத்தின் இலக்குகளை நோக்கி அனைவரையும் அழைத்துச்வ செல்வதற்கான உறுதியான நடவடிக்கையின் ஒரு கருவியாகும். குறிப்பாக சமூகத்தில் வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கு அனைத்து வகுப்பினரையும் முன்னேற்றுவதே ஆகும் எனவே அந்த அடிப்படையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கிய சட்ட திருத்தம் செல்லும் .
பொருளாதார ரீதியிலான வகைப்படுத்தலை வைத்து வழங்கப்பட்ட இந்த 10 சதவிகித இடஒதுக்கீடு சரியானதே மேலும் இந்த இட ஒதுக்கீடு சமத்துவத்துக்கான குறியீட்டை மீறவில்லை, ஏற்கனவே உள்ள 50 சதவிகஇத உட ஒதுக்கீடு என்ற கட்டமைப்பையும் மீறவில்லை மேலும் பொருளாதாரத்திர் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு பொருளாதார அளவுகோலை வைத்து சிறப்பு ஒதுக்கீடு முறையை உருவாக்குவது அடிப்படை கட்டமைப்பை மீறாது என தெரிவித்தார்.
டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா - சோயிப் மாலிக் விவாகரத்து?
மூத்த நீதிபதி பீலா திரிவேதி கூறுகையில், நாடாளுமன்றம் மக்களின் தேவைகளை அறிந்தஇருக்கிறது, குறிப்பாக இட ஒதுக்கீட்டிலிருந்து பொருளாதார ரீதியில் மக்களை ஒதுக்கி வைப்பதை அறிந்தஆன் இந்த சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும். எஸ்.சி, எஸ்.டி பிரிவினரை தவிர்த்து பிற பிரிவினருக்கும் சிறப்பு சலுகை வழங்க இந்த சட்ட திருத்தம் வழிவகை செய்துள்ளது, நடாளுமன்றத்தின் இந்த செயல் நியாயமான வகைப்பாடு ஆகும். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகும். நிலையில் பொதுவாக உள்ள அனைத்து இடஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேவேளையில்EWS பிரிவினருக்கு இடஒதுக்கீடு என்பது எந்த விதிகளையும், அடிப்படைகளையும் மீறவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். 10% இடஒதுக்கீடு சரியே என தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஜே.பி.பர்திவாலா கூறுகையில், 10% இட ஒதுக்கீடு என்பதை ஏற்கிறேன், 10% இட ஒதுக்கீடு வழங்கிய சட்ட திருத்தல் சரியே, அது செல்லும்இடஒதுக்கீடு முறை குறிப்பிட்ட நலனுக்காகனது என்பதை அனுமதிக்க முடியாது. இட ஒதுக்கீடு என்பது பொருளாதார சமத்துவமின்மையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். கடந்த 70 ஆண்டுகளாக வழங்கப்படும் வரும்கல்வி, முன்னேற்றம் ஆகியவை பல்வேறு சமூக நிலையில் இருக்கும் மக்களிடையேயான இடைவெளியை குறைத்துள்ளது. எனவே முன்னேற்றம் அடைந்தவர்களை பிற்படுத்தப்பட்டோர், பின்தங்கியவர்கள் என்ற பிரிவில் இருந்து நீக்க வேண்டும் அப்படி என்றால் தான் உண்மையாக பின் தங்கியவர்கள், பயன் பெறுவர். பிற்படுத்தப்பட்டோர், பின்தங்கியவர்கள் என்ற பிரிவை வகுக்கும், தீர்மானிக்கும் முறைகளை இனலறைய கால கட்டத்திற்கேற்ப மறுபரிசீலனை செய்ய வேண்டும். மேலும் இட ஒதுக்கீடு என்பது கால வரையறை இல்லாமல் தொடரக்கூடாது பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்புனருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கியது சரியானதே, எனவே 103வது சட்ட திருத்தம் செல்லும் என கூறியுள்ளார்.
நீதிபதி ரவீந்திர பட் தனது தீர்ப்பில், இந்த இட ஒதுக்கீட்டை எதிர்கிறேன். பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவிகதம் வழங்கிய சட்டத்திருத்தம் செல்லும் என்ற பிற நீதிபதிகள் தீர்ப்பிலிருந்து மாறுபடுகிறேன். 10% வழங்கும் 103வது சட்ட திருத்தம் பிற்படுத்தப்பட்டோருக்க வழங்கியுள்ள இடஒதுக்கீடு தான் அவர்களை சிறப்பான உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்குகிறது. தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்புனருக்கு 10% இட ஒதுக்கீடு என்பது சமத்துவம் என்ற அரசியல் சாசனத்தில் இதயத்தையே தாக்குவதாக உள்ளது. இட ஒதுக்கீடு 50% மீறக்கூடாது,
ஆனால் தற்போது அதனை தாண்டி இடஒதுக்கீட்டை அனுமதிப்பது என்பது மேலும் மீறல்களுக்கு வழி வகுக்கும், தமிழகத்தில் பின்பற்றப்படும் 69% இடஒதுக்கீட்டு என்பது அங்குகள்ள எஸ்சி, எஸ்.டி, ஓ.பி.சி உள்ளிட்ட மக்கள் தொகையை கணக்கில் கொண்டு பின்பற்றுவது என்பது ஆகும். எஸ்.சி, எஸ்.டி , ஓ.பி.சி பிரிவினரை புறந்தள்ளிவிட்ட இடஒதுக்கீடு என்பது அரசியல் சாசனத்தில் அனுமதிக்காத ஒன்று விசயம் ஆகும். மேலும் சின்ஹோஆணையத்தின் அறிக்கை அடிப்படையில் மொத்த எஸ்.சி மக்கள் தொகையில் 38 சதவிதம் பேரும், மொத்தமுள்ள எஸ்.டி, மக்கள் தொகையில் 48% பேரும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனர் என கூறுகிறது, அப்படியெனில் இந்த பிரிவினரே பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் ஆவர். இந்த EWS 10% இடஒதுக்கீடு என்பது சமத்துவம் என்ற அரசியல் சாசன இதயத்தின் மீதான தாக்குவதல் 10% இட ஒதுக்கீடு சட்ட திருத்தம் சமூக பின் தங்கிய வகுப்பினருக்கு எதிராக உள்ளது,
அதேபோல் 10% முறை உன்பது, இட ஒதுக்கீடு என்பது சமூக பின்தங்கிய உரிய அங்கீகாரம் இல்லாதவர்களுக்கானது என்பதை விடுத்து பொருளாதார அடிப்படையிலான நோக்கத்திற்கு மாற்றுவதாக உள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டை அரசுகள் அறிமுகப்படுத்தலாம் என்பது செல்லாது, அந்த சட்ட திருத்தத்தை ரத்து செய்வதாக தீர்ப்பு பொது நன்மைக்காக பொருளாதார அளவுகோல்கள் அனுமதிக்கப்பட்டாலும், இதில் பாகுபாடு காட்டப்படுவதாலும் , அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறுவதாக உள்ளதாலும் இந்த சட்டத்தை ரத்து செய்கிறேன் என தெரிவித்தார்.
கோவை டூ குருவாயூர் 150 கி.மீ பயணம்..! மனைவியை கரம் பிடிக்க சைக்கிளில் சென்ற இளைஞர்
தலைமை நீதிபதி யு.யு.லலித்- சட்ட திருத்தம் செல்லாது என்ற நீதிபதி ரவாந்திர பட் வழங்கிய தீர்ப்புடன் ஒத்துப்போகிறேன்.
இந்த சட்ட திருத்தம் செல்லாது என்பதே எனது தீர்ப்பு என குறிப்பிட்டார். இந்தநிலையில் இந்த தீர்ப்பில் 3 நீதிபதிகள் சட்டத்து ஆதரவாகவும், இருவர் எதிராகவும் தீர்ப்பளித்தனர்.எனவே பெரும்பான்மை தீர்ப்பு அடிப்படையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் செல்லும் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்