கோவை டூ குருவாயூர் 150 கி.மீ பயணம்..! மனைவியை கரம் பிடிக்க சைக்கிளில் சென்ற இளைஞர்
பசுமை இந்தியா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது திருமணத்திற்கு கோவையிலிருந்து குருவாயூருக்கு சைக்கிளில் சென்ற இளைஞரின் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
பசுமை இந்தியா விழிப்புணர்வு
கோவை தொண்டாமுத்தூர், காளிக்கநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவசூர்யா (28) இவர் குஜராத் மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். ஆரோக்கியமான இந்தியா, பசுமை இந்தியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைக்கிள்கள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக குஜராத் மாநிலத்தில் உள்ள சபர்மதி ஆசிரமம் முதல் கோவை ராமகிருஷ்ணா மிஷன் வரை 10 நாட்களில் பல்வேறு மாநிலங்களை கடந்து 1902 கிமீ தனியாக சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளார். இதே போல பல்வேறு மாநிலங்களுக்கு சைக்களில் பயணம் செய்து விழப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்தநிலையில் இவருக்கு குருவாயூர் கோயிலில் கேரளாவை சேர்ந்த அஞ்சனா என்ற பெண்ணுடன் இன்று திருமணம் நடைபெற இருந்தது.
உருவாகிறது புதிய புயல்..? எந்த எந்த மாவட்டங்களில் மழை பெய்யும்.? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
குருவாயூருக்கு சைக்கிளில் பயணம்
இதற்காக நேற்று கோவையிலிருந்து குருவாயூருக்கு சுமார் 150 கிலோ மீட்டர் சைக்கிளில் சாலை மார்க்கமாக பயணத்தை தொடங்கினார். இதனையடுத்து இன்று அதிகாலை குருவாயூருக்கு சென்றடைந்தார். பசுமை இந்தியா தொடர்பாக சைக்கிளில் சென்ற அவருக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது. சைக்கிள் பயணம் தொடர்பாக சிவசூர்யா கூறுகையில், உடல் ஆரோக்கியத்தில் பொதுமக்கள் அனைவரும் அக்கறை எடுத்துக் கொண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பசுமை இந்தியாவை உருவாக்க வலியுறுத்தி சைக்கிள் பயணம் மேற்கொண்டதாக தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்