உ.பி.யில் பெண்கள் மீது தடியடி! முடியைப்பிடித்து இழுத்து தெருச்சண்டை! கல் வீசியதாக போலீஸார் குற்றச்சாட்டு
உத்தரப்பிரதேசம், அம்பேத்கர்நகர் மாவட்டத்தில் உள்ள ஜலால்பூரில் பெண்களுக்கும், போலீஸாருக்கும் ஏற்பட்ட மோதலில் பெண்கள் மீது போலீஸார் தடியடிநடத்தியதால், அந்த இடமே தெருச்சண்டை போல் காட்சியளித்தது.
உத்தரப்பிரதேசம், அம்பேத்கர்நகர் மாவட்டத்தில் உள்ள ஜலால்பூரில் பெண்களுக்கும், போலீஸாருக்கும் ஏற்பட்ட மோதலில் பெண்கள் மீது போலீஸார் தடியடிநடத்தியதால், அந்த இடமே தெருச்சண்டை போல் காட்சியளித்தது.
ஆனால், பெண்கள் தங்கள் மீது கல்வீசித் தாக்கியதால்தான் கூட்டத்தினரைக் கலைக்க லேசாகத் தடியடி நடத்தினோம் என போலீஸார் குற்றம் சாட்டுகிறார்கள்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஜலால்பூரில் உள்ள அம்பேத்கர் சிலையே யாரே சில விஷமிகள் சேதப்படுத்திவிட்டனர். இதைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கக் கோரியும் பெண்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களைக் கலந்து செல்லும்படியும், சிலையை மாற்று இடத்தில் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸார் தெரிவித்தனர்.
திருப்பதி கோவில் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..? அப்படியே ஷாக் ஆயிடுவீங்க !! முழு விவரம் இதோ..
இது தொடர்பாக போலீஸாருக்கும், பெண்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பெண்கள் சிலர் போலீஸார் மீதும்,போலீஸ் வாகனங்கள் மீதும் கல்வீசித் தாக்கியதாக போலீஸார்குற்றம் சாட்டுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து பெண்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். லத்திகள், பிளாஸ்டிக் டியூப்கள், ரப்பர் டியூப்கள் மூலம் பெண்களை சரமாரியாக போலீஸார் தாக்கினர். அதுமட்டுமல்லாமல் பெண்களின் தலைமுடியைப் பிடித்து இழுத்தும், கீழேதள்ளி மிதித்தும் அவர்களை போலீஸார் தாக்கினர்.
பதிலுக்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களும், பெண் போலீஸாரின் தலைமுடியைப் பிடித்து இழுத்தும், தாக்கியும் ரகளையில் ஈடுபட்டனர். போலீஸாரும், பெண்களும் தாக்கிக்கொண்ட சம்பவத்தால் அந்தப் பகுதியே தெருச்சண்டை நடக்கும் இடம்போல் காட்சியளித்தது. போலீஸாரின் தடியடிக்குப்பின் பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அம்பேத்நகர் போலீஸ் அதிகாரி அஜித் குமார் சின்ஹா கூறுகையில் “ பெண்களுக்கும், போலீஸாருக்கும் வாக்குவாதம் நடந்தபோது, திடீரென சிலர் போலீஸ் வாகனங்கள் மீதும், போலீஸார் மீதும் கல்வீசித் தாக்கியதால்தான் லேசான தடியடி நடத்தினோம்” எனத் தெரிவித்தார்