national anthem: அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் தேசிய கீதம் பாடுவது கட்டாயம்: கர்நாடக அரசு உத்தரவு
கர்நாடக மாநிலங்களில் அனைத்துப் பள்ளிக்கூடங்கள், ப்ரீயுனிவர்சிட்டி கல்லூரிகளில் மாணவர்கள் காலையில் தினசரி தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநிலங்களில் அனைத்துப் பள்ளிக்கூடங்கள், ப்ரீயுனிவர்சிட்டி கல்லூரிகளில் மாணவர்கள் காலையில் தினசரி தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக அரசு 17ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. இது அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், ப்ரீ யுனிவர்சிட்டி கல்லூரிகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜகவில் தேர்தலே இல்லை: மோடி சொல்றதுதான் : சுப்பிரமணியன் சுவாமி சுளீர் விமர்சனம்
கர்நாடக அரசு பிறப்பித்த உத்தரவில் “ பெங்களூருவில் உள்ள சில உயர்நிலைப் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் காலை நேரத்தில் மாணவர்களுக்கு கூட்டங்கள் நடத்துவதில்லை, அதில் தேசிய கீதம் பாடுவதில்லை என்று அரசுக்கு புகார் வந்தது. காலை நேரத்தில் இறைவணக்கக் கூட்டம் நடத்தினாலும் அதில் தேசியகீதம் பாடுவதில்லை என்ற புகாரும் வந்தது.
இந்தப் புகாரையடுத்து, பெங்களூரு வடக்கு மற்றும் தெற்கு மண்டல கல்வி இணை இயக்குநர்கள் அந்தப் பள்ளிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்தப் பள்ளிகளில் காலை நேர இறைவணக்கத்தின் போது, தேசியகீதம் பாடுவதில்லை என்பது உறுதியானது.
தவறான செய்திகளைப் பரப்பிய 8 யூடியூப் சேனல்கள் முடக்கி அரசு நடவடிக்கை:பட்டியல் இதோ!
இதையடுத்து, கர்நாடக கல்விச்சட்டம் பிரிவு 133(2)ன் கீழ் மாநில அரசு பிறப்பித்த உத்தரவில், இனிமேல் அனைத்து பள்ளிகள், பியூ கல்லூரிகள், அரசுப்பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்தும் தினசரி காலை இறைவணக்க கூட்டம் நடத்த வேண்டும். அதில் மாணவர்கள் கூட்டாகச் சேர்ந்து தேசிய கீதம் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.