ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் பலியான சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. விமானத்தில் இருந்த பெட்ரோல் காரணமாக விமானம் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் முழுவதுமாக எரியாத பகவத் கீதை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Air India crash Bhagavad Gita : நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது ஏர் இந்தியா விமான விபத்து. அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்டு சென்ற விமானம் அடுத்த ஒரு சில நிமிடங்களில் கீழே விழுந்து வெடித்து சிதறியது. விமானத்தில் லண்டன் செல்லும் அளவிற்கு முழுவதுமாக நிரப்பப்பட்ட பெட்ரோல் இருந்துள்ளது. 50ஆயிரம் முதல் 1 லட்சம் லிட்டர் வரை பெட்ரோல் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக விமான கீழே விழுந்ததில் பயங்கரமாக வெடித்து சிதறியது. இதனால் விமானத்தில் பெரும்பாலான பகுதிகள் தீயில் எரிந்து நாசமானது.
விமான விபத்தில் எரியாமல் கண்டெடுக்கப்பட்ட பகவத் கீதை
மேலும் விமானத்தில் பயணித்த விமானி உட்பட 241 பேர் எரிந்து பலியானார்கள். இந்த காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இந்த விமானத்தில், பயணித்த 242 பேரில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டவர்கள், 7 பேர் போர்ச்சுக்கீசிய நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமான விபத்தில் இங்கிலாந்து குடியுரிமையை பெற்ற ராமேஷ் என்பவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். இந்த நிலையில் விமானம் விபத்துக்குள்ளான பகுதிகளில் மீட்பு பணியானது சம்பவம் நடைபெற்ற இடத்தில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.
சிதறிக்கிடந்த விமான பாகங்கள்
அப்போது விமானத்தில் பயணம் செய்த பயணிகள் சிதறிக்கிடந்தது. பல கனவுகளோடும், பல ஆசைகளோடும் பயணம் செய்தவர்களின் உடமைகைள் பெட்டி பெட்டியாக சிறதி கிடந்துள்ளது. இந்த பயங்க விபத்தில் முழுவதுமாக எரியாத பகவத் கீதை கண்டெடுக்கப்பட்டுள்ளது, இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
