உலகளவில் புகழ்பெற்ற டபிள்யுடபிள்யுஇ(WWE) மல்யுத்தப் போட்டியின் சாம்பியன் தாலிப் சிங் ராணா அகா எனப்படும் தி கிரேட் காளி இன்று பாஜகவில் இணைந்தார்.
உலகளவில் புகழ்பெற்ற டபிள்யுடபிள்யுஇ(WWE) மல்யுத்தப் போட்டியின் சாம்பியன் தாலிப் சிங் ராணா அகா எனப்படும் தி கிரேட் காளி இன்று பாஜகவில் இணைந்தார்.
பஞ்சாப் மாநிலத்தில் வரும் 14-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கும் நிலையில், அந்த மாநிலத்தைச்சேர்ந்த தி கிரேட் காளி பாஜகவில் இணைந்திருப்பது, அந்தக் கட்சிக்கு பெரும் நட்சத்திர அந்தஸ்தையும், புகழையும் சேர்த்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கிரேட் காளி, போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றி, மல்யுத்தத்தின் மீதான ஆர்வத்தால் அந்தப் பணியை ராஜினாமா செய்தார். அதன்பின், 2000ம் ஆண்டில் தொழில்முறை மல்யுதத்தில் களம் கண்ட ராணா, அதன்பின் டபிள்யுடபிள்யுஎப் போட்டிகளில் பங்கேற்றார்.
டபிள்யுடபிள்யுஎப் போட்டியில் தி கிரேட் காளி பங்கேற்றபின் உலகளவில் இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் விரைவாகப் பிரபலமடைந்தார். டபிள்யுடபிள்யுஎப் பிரிவில் சாம்பியன் பட்டத்தையும் தி கிரேட் காளி வென்றார். அதுமட்டுமல்லாமல் ஹாலிவுட் திரைப்படங்களிலும், பாலிவுட் திரைப்படங்களிலும் தி கிரேட் காளி நடித்துளளார். 2021 டபிள்யுடபிள்யுஇ ஹால் ஆஃப் ஃபேமிலும் தி கிரேட் காளி இடம் பெற்றுள்ளார்.

மத்திய அரசு கொண்டவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வந்தபோது, அங்கு சென்ற தி கிரேட் காளி விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்துக்களைத் தெரிவித்து பாஜகவை விமர்சித்தார். அதுமட்டுமல்லாமல் விவசாயிகளின் விளைப் பொருட்களை மத்தியஅரசு அதிக விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும், மத்தியஅரசின் வேளாண் சட்டத்தால், சாலை ஓர வியாபாரிகள், தினக்கூலிகள் எனப் பலரும் பாதிக்கப்படுவார்கள் “ எனவிமர்சித்தார்.
இந்நிலையில், அதிர்ச்சியளிக்கும் வகையில் பாஜகவில் இன்று தி கிரேட் காளி இணைந்துள்ளார். பாஜக தலைவர்கள் ரத்தோர் உள்ளிட்டோர் கிரேட் காளிக்கு மாலை அணிவித்து அடிப்படை உறுப்பினர் அட்டையை வழங்கினர்.

தி கிரேட் காளி நிருபர்களிடம் கூறுகையில் “ பாஜகவில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தேசத்துக்காக பிரதமர் மோடி பணியாற்றுவதைப் பார்க்கும்போது, அவர்தான் சரியான பிரதமர் என எண்ணுகிறேன். அதனால்தான் ஏன் பாஜகவில் சேரக்கூடாது, தேசத்தின் வளர்ச்சிக்காக உழைக்கக்கூடாது என்று எண்ணினேன். பாஜகவின் தேசியக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நான் பாஜகவில் இப்போது இணைந்துவிட்டேன்” எனத் தெரிவித்தார்
