லண்டனில் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் தமிழ்பாடல்கள் அதிகம் இடம்பெற்றதால் ஆத்திரமடைந்த வட இந்திய ரசிகர்கள் இந்திப் பாடல்களை பாடும்படி கோஷமிட்டு, வௌியேறினர். இதனால், சலசலப்பு ஏற்பட்டது.

இசைத்துறைக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் தடம் பதித்து 25 ஆண்டுகளை கொண்டாடும் விதமாக லண்டன் வாழ் தமிழர்கள் அவருக்கு லண்டனில் ‘நேற்று இன்று நாளை’ என்ற தலைப்பில் பிரமாண்ட பாராட்டு விழாவை லண்டன் வெம்ளி அரங்கில் கடந்த 8-ந்தேதி நடத்தினர்.

இதில் பாடகர்கள் பென்னி தயால், ஜாவித் அலி, நீதி மோகன், ஹரிசரன், ஜோனிதாகாந்தி, ரஞ்சித் பராத் ஆகியோரும் கலந்து கொண்டு பாடினர்.

இந்த நிகழ்ச்சியில் வட இந்தியர்களும் அதிக அளவில் வந்திருந்தனர்.  ரஹ்மான்இந்திப் பாடல் பாடுவார் என்று எதிர்பார்த்துக் காத்திருக்க, ரஹ்மானோ தமிழ்ப் பாடல்கள் அதிகமாகவும், இந்தி பாடல்களை குறைவாகவும் பாடினார்.

இதனால் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த வடஇந்திய ரசிகர்கள் இந்திப் பாடல்ளைஅதிகாக பாடும்படி ரஹ்மானை நோக்கி கோஷம் போட்டனர். ஆனால் ரஹ்மானோஅதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தமிழ் பாடல்களையே பாடினார்.

இதனால் பொறுமையிழந்த வட இந்தியர்கள் பாதியிலேயே இசை நிகழ்ச்சியில் இருந்து கிளம்பினார்கள். இதனால் விழா மண்டபத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ரசிகர்கள் டுவிட்டரில் கடுமையாக கருத்துக்களை தெரிவித்து கண்டனத்தை தெரிவித்தனர். இதனால், டுவிட்டரில் வட இந்திய ரசிகர்களுக்கும், தமிழ் ரசிகர்களுக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் எழுந்தது. சிலர் பணத்ைததிருப்பித் தர வேண்டும் என்றும் பதிவிட்டு இருந்தனர்.

இதில் பாடகி சின்மயி இசையமைப்பாளர் ரஹ்மானுக்கு ஆதரவாக டுவிட்டரில்கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், “ ஏ.ஆர். ரஹ்மான் 2 ஆஸ்கார்விருதுகளை வென்று சாதனை படைத்தவர். இந்தியர். அவர் தனது தாய்மொழியில் 7 பாடல்களை பாடினால் என்ன தவறு. இசைக்கு மொழி தடையில்லை. தமிழ்பாடல்கள் மட்டுமல்ல இந்திப்பாடல்களையும் பாடினாரே?.

அமெரிக்காவை துரத்தி பிடிக்கும் உங்கள் கனவில் உங்கள் குழந்தைகள் ஸ்பானிஷ்மொழி பேசுகிறார்கள். இந்தியா ஒரு காலத்தில் அடிமையாக இருந்த இங்கிலாந்தில் வாழ்ந்து கொண்டு, தமிழ் பாடல்களை கேட்டால் மட்டும் கோஷமிடுகிறீர்கள். இசையின் குரு ரஹ்மான்’’ எனப் பதிவிட்டிருந்தார்.