சிறுவனின் காயத்திற்கு ஃபெவிகுவிக் போட்டு சிகிச்சை அளித்த மருத்துவர்.. அதிர்ந்து போன பெற்றோர்..
சிறுவனின் காயத்திற்கு தையல் போடுவதற்கு பதில், ஃபெவிகுவிக் தடவி மருத்துவர் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விபத்தில் சிக்கும் போதோ அல்லது கீழே விழுந்து அடிபடும் போதோ ஏற்படும் வெட்டுக்காயங்களுக்கு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்படும். பின்னர் அந்த காயத்தின் தன்மைக்கேற்ப தையல் போடப்படும். காயம் வேகமாக ஆறவும், தையல் போடுவதுடன், மருந்து மாத்திரைகளையும் மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் தெலங்கானாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. அங்கு அடிபட்ட காயத்திற்காக சிகிச்சைக்கு சென்ற 7 வயது சிறுவனுக்கு, மருத்துவர் ஒருவர் தையல் போடுவதற்கு பதில் ஃபெவிகுவிக்கை தடவி உள்ளார்.
இதையும் படிங்க : சாதம் இல்லாமல் குழம்பு மட்டும் சமைத்த மனைவியை கொலை செய்த கொடூர கணவன்.. அதிர்ச்சி சம்பவம்
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம், லிங்கசூகூர் பகுதியை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா. இவர் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக மனைவி மற்றும் 7 வயது மகனுடன் தெலங்கானா சென்றுள்ளார். இந்த சூழலில் அந்த சிறுவன் அங்கு சென்றதுடன் அங்கும் இங்கும் ஓடி ஆடி விளையாடி உள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக அச்சிறுவன் கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டுள்ளது. மேலும் இடது கண் ஓரமாகவும் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வலி தாங்க முடியாத அச்சிறுவன் அலறி துடித்துள்ளான். இதனால் பதறிப்போன்ற சிறுவனின் பெற்றோர், உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அச்சிறுவனை அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த மருத்துவர், சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கிறேன் என்ற பெயரில் ஃபெவிகுவிக்கை தடவி விட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மருத்துவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் உரிய விளக்கம் அளிக்க்ப்படவில்லை.
இதையடுத்து சிறுவனின் தந்தை வம்சி கிருஷ்ணா அங்குள்ள காவல்நிலையில் தனியார் மருத்துவமனை குறித்து புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் மருத்துவமனைக்கு ஆய்வு சென்ற சுகாதாரத்துறையினர், மருத்துவமனைக்கு சீல் வைத்தனர்.
இதையும் படிங்க : ஒவ்வொரு கன்னடரின் கனவும் எனது கனவு - கர்நாடக தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ