சாதம் இல்லாமல் குழம்பு மட்டும் சமைத்த மனைவியை கொலை செய்த கொடூர கணவன்.. அதிர்ச்சி சம்பவம்

சாதம் செய்யாமல் குழம்பு மட்டும் சமைத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The cruel husband killed his wife who cooked only gravy without rice.. Shocking incident

ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில் சாதம் சமைக்காததற்காக மனைவியை அடித்துக் கொன்ற கணவர் நேற்று  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஜமன்கிரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நுவாதி கிராமத்தில் நடந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் 40 வயதான சனாதன் தருவா என்றும், அவரது மனைவி 35 வயதான புஷ்பா தருவா என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சனாதனுக்கும் அவரது மனைவி புஷ்பாவுக்கும் ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர். இவர்களின் மகன் ஞாயிற்றுக்கிழமை இரவு உறங்குவதற்காக தனது நண்பரின் வீட்டிற்குச் சென்றுவிட்டார். மேலும் அவர்களின் மகள் குச்சிந்தாவில் வீட்டு வேலை செய்ய சென்றுவிட்டார்.

இதையும் படிங்க : அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடக்கம்.. இந்த தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

இந்த சூழலில் சனாதன் வீடு திரும்பியபோது, புஷ்பா சாதம் சமைக்காமல், குழம்பு மட்டுமே சமைத்திருப்பதை பார்த்துள்ளார். இதனால் கோபமடைந்த சனாதன், புஷ்பாவிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருக்கட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், சனாதன் தனது மனைவியை கொடூரமாக தாக்கியதுடன், அவரை கொலை செய்தார் என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நேற்று காலை வீடு திரும்பிய சனாதன் மகன், தனது தாயார் இறந்து கிடப்பதைக் கண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், புஷ்பாவின் உடலை கைப்பற்றி அவரின் கணவரை கைது செய்தனர். 

இதையடுத்து நேற்று பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட கணவர் கைது செய்து வைக்கப்பட்டுள்ளளதாக ஜமன்கிரா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரேம்ஜித் தாஸ் தெரிவித்தார். சாதம் சமைக்காத ஆத்திரத்தில், மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க : ஒவ்வொரு கன்னடரின் கனவும் எனது கனவு - கர்நாடக தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios