அதுக்குள்ள அவசரமா... ரேவந்த் ரெட்டியை நேரில் சென்று வாழ்த்திய அதிகாரி சஸ்பெண்ட்!
அஞ்சனி குமார் மற்றும் வேறு சில போலீஸ் அதிகாரிகள் இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள ரேவந்த் ரெட்டியை அவரது இல்லத்தில் சந்திக்க சென்றனர். அஞ்சனி குமார் ரேவ்ந்த் ரெட்டிக்குப் பூங்கொத்து வழங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சட்டசபை தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தெலுங்கானா காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியை நேரில் சென்று சந்தித்ததற்காக, தெலுங்கானா உயர் போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தெலுங்கானா காவல்துறை இயக்குநர் ஜெனரல் அஞ்சனி குமார் மற்றும் இரண்டு மூத்த காவல்துறை அதிகாரிகள் அந்த மாநிலக் காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியைச் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளனர். இது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று கூறி இந்த அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தங்கள் செயலுக்கு விளக்கம் அளிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.
அஞ்சனி குமார் மற்றும் வேறு சில போலீஸ் அதிகாரிகள் இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள ரேவந்த் ரெட்டியை அவரது இல்லத்தில் சந்திக்க சென்றனர். அஞ்சனி குமார் ரேவ்ந்த் ரெட்டிக்குப் பூங்கொத்து வழங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கானா மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆளும் பிஆர்எஸ் கட்சியைப் பின்னுக்குத் தள்ளி ஆட்சி அமைப்பதை உறுதி செய்துள்ளது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக உள்ள ரேவந்த் ரெட்டி முதல்வராகக்கூடும் என்று கருதப்படுகிறது.
இருப்பினும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படாமல், வேட்பாளர்களில் ஒருவரான ரேவ்ந்த் ரெட்டியை டிஜிபி சந்திப்பது, தவறான நோக்கத்தின் தெளிவான அறிகுறியாகும் என்றும் அதனால் தான் அவர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ள காங்கிரஸ், மொத்தமுள்ள 119 இடங்களில் 64 இடங்களில் முன்னணியில் உள்ளது. பிஆர்எஸ் 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதே நேரத்தில் இன்று அறிவிக்கப்பட்ட ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மற்ற மூன்று மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
தேர்தல் முடிவு பற்றி ஒரே வார்த்தையில் கருத்து சொன்ன கார்த்தி சிதம்பரம்! வெறுத்தெடுக்கும் பாஜக!