தெலுங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணை பெற்றோர் கொலை செய்து உடலை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானாவில் முதல்வராக சந்திரசேகர ராவ் இருந்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தை மிஞ்சும் அளவிற்கு ஆணவ கொலைகள் அதிகம் நடக்கும் இடங்களில் தெலங்கானாவும் தற்போது இடம் பெற்றுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் அம்ருதா என்பவர் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இப்போது அதுபோல மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. 

தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்திலுள்ள தலமடுகு கிராமத்தைச் சேர்ந்த அனுராதாவும், அதே கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணனும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் இவர்கள் இருவரும் வேற்று சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் 20 நாட்களுக்குப் பிறகு சொந்த ஊருக்கு சென்றனர்.

லட்சுமணன் வீட்டில் தங்களது மகள் இருப்பதை அறிந்த அனுராதாவின் பெற்றோர் விரைந்தனர். இவரை கணவரிடமிருந்து பிரித்து பெற்றோர் அழைத்து வந்தனர்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று, அனுராதாவை காணவில்லை என பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர். அங்குள்ள காட்டுப்பகுதியில் அனுராதா உடல் எரிக்கப்பட்டு கிடந்ததை கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

 

இந்த கொலை தொடர்பாக அனுராதாவின் பெற்றோரை அழைத்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்த போலீசார், அனுராதாவின் பெற்றோரை அழைத்து விசாரித்தனர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. தனது மகள் அனுராதா, வேறு சாதியைச் சேர்ந்த லட்சுமணனை காதலித்தது திருமணம் செய்து கொண்டதால் அவலை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்தோம். இந்நிலையில் அனுராதாவை தாக்கிய போது வலி தாங்க முடியாமல் உயிரிழந்தார். இதனையடுத்து அவளது உடலில் பெற்றோர் ஊற்றி எரித்துக்கொன்றதாக பெற்றோர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.