Asianet News TamilAsianet News Tamil

இன்று முதல் பெண்கள், திருநங்கைகள் இலவசமாக பயணிக்கலாம்.. மகாலட்சுமி திட்டம் தொடக்கம்..

தெலுங்கானாவில் அரசுப்பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இலவச பேருந்து பயண திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

Telangana Govt launches Mahalakshmi scheme free bus travel for women transgenders cm revanth reddy latest Rya
Author
First Published Dec 9, 2023, 11:13 AM IST

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் கட்சி பல்வேறு கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுகளை அளித்தது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி, ஆர்.டி.சிர் பேருந்துகளில் பெண்கள், திருநங்கைகளுக்கு இலவச பயணம், பெண்களுக்கு மாதம் ரூ.2500 நிதியுதவி, ரயத்து பரோசா திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.16,000, ரூ.500க்கு கேஸ் சிலிண்டர், 200 யூனிட் வரை இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது.

இந்த நிலையில் தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் காங்கிரஸ் கட்சி முதன்முறையாக அங்கு ஆட்சியமைத்துள்ளது. தெலங்கானாவின் புதிய முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி அம்மாநில முதலமைச்சராக பதவியேற்றதும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கோப்பில் நேற்று கையெழுத்திட்டார். அதன்படி, அரசுப்பேருந்துகளில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கான இலவச பேருந்து பயணத்திட்டமான மகாலட்சுமி திட்டம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இந்த தெலுங்கானா மாநிலத்தின் எல்லைகளுக்குள் அரசு நடத்தும் விரைவுப் பேருந்துகளில் பெண்கள், அனைத்து வயதுப் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு இலவசப் பயணத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

'மகா லட்சுமி திட்டம்' என்றால் என்ன?

தெலங்கானா மாநிலத்தில் வசிக்கும் பெண்கள், அனைத்து வயதினரும் பெண்கள் மற்றும் திருநங்கைகள் பயனடையும் வகையில் மகாலட்சுமி திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் டிசம்பர் 9 முதல் அரசு பேருந்துகளில் தெலுங்கானா மாநில எல்லைக்குள் எங்கு வேண்டுமானாலும் இலவசமாக பயணிக்கலாம்.

ரூ. 3,18,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நடத்தும் இந்திய பெண்.. உலகின் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவர்..

தெலுங்கானா மாநில எல்லைகள் வரை பயனாளிகளுக்கு மாநிலங்களுக்கு இடையேயான அரசுப் பேருந்துகளில் பயணம் இலவசம். மேலும், மென்பொருள் அடிப்படையிலான "மஹா லக்ஷ்மி" ஸ்மார்ட் கார்டை உருவாக்குவதற்கான திட்டங்கள் நடந்து வருவதாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. அரசுப்பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்கள், தங்கள் வசிப்பிட அடையாள அட்டையை மட்டும் காட்டினால் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளை பதவியேற்ற உடனே நிறைவேற்றியதற்கு அம்மாநில மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் இந்த திட்டம்  அம்மாநில பெண்களிடளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios