ரூ. 3,18,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை நடத்தும் இந்திய பெண்.. உலகின் சக்திவாய்ந்த பெண்களில் ஒருவர்..
உலகின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் HCL நிறுவன தலைவர் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா 60-வது இடத்தில் உள்ளார்
டிசம்பர் 5 அன்று வெளியான Forbes-ன் உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் 4 இந்தியப் பெண்கள் இடம்பிடித்துள்ளனர். வாழ்க்கையை மாற்றும் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த பெண்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. உலகளவில் அரசியல்வாதிகள், CEO க்கள், பொழுதுபோக்கு, பரோபகாரர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் உட்பட மிகவும் செல்வாக்கு மிக்க முன்மாதிரியாக திகழும் இந்த பெண்களுக்கு தரவரிசை வழங்கப்படுகின்றன.
இந்த பட்டியலில் ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா 60-வது இடத்தில் உள்ளார். HCL நிறுவனர் ஷிவ் நாடார் மகள் இந்தியாவின் பணக்காரப் பெண்ணாக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
இந்திய பெரும்பணக்கார பெண்ணும், நன்கொடையாளரும், ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா இந்தியவின் முன்னணி ஐடி நிறுவனமான HCLTech என்ற பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு தலைவராக உள்ளார்.
2009 இல் HCL இல் சேர்ந்த ரோஷ்னி, கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதம், தனது தந்தையிடமிருந்து HCL இன் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ரூ. 3,18,000 கோடி சந்தை மூலதனம் கொண்ட தொழில்நுட்ப நிறுவனத்திற்கான அனைத்து மூலோபாய தேர்வுகளுக்கும் அவர் பொறுப்பாக உள்ளார். மேலும் அந்நிறுவனத்தின் நிறுவனத்தின் CSR வாரியக் குழுவிற்கும் தலைமை தாங்குகிறார்.
ரோஷ்னியின் தந்தை தந்தை ஷிவ் நாடார் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் ஆவர்.. ஆகஸ்ட் 20 நிலவரப்படி அவரின் நிகர சொத்து மதிப்பு 27.3 பில்லியன் டாலர்கள், அதாவது ரூ.2,27,010 கோடி ஆகும்.
அமெரிக்காவில் உள்ள Northwestern university படித்த அவர் தகவல் தொழில்நுட்ப துறையில் பட்டம் பெற்றார். மேலும் அவர் கெல்லாக் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் தனது எம்பிஏ படிப்பை முடித்தார். கல்வியை மையமாகக் கொண்ட ஷிவ் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலராகவும் ரோஷ்னி உள்ளார், இது இந்தியாவின் பல சிறந்த கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை நிறுவியது.
ரோஷினிக்கு பாதுகாப்பு மற்றும் வனவிலங்குகளில் அதிக ஆர்வம் உள்ளது. 2018 இல், அவர் The Habitats என்ற அறக்கட்டளையை நிறுவினார். இந்த அறக்கட்டளை இந்தியாவின் பூர்வீக இனங்கள் மற்றும் இயற்கை வாழ்விடங்களைப் பாதுகாக்க விரும்புகிறது.
2019 ஆம் ஆண்டு முதல் அனிமல் பிளானட்/டிஸ்கவரி சேனல்களுக்காக On The Brink என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தயாரித்து வருகிறார் ரோஷ்னி. இந்த நிகழ்ச்சி இந்தியாவில் மிகவும் அழிந்து வரும் வனவிலங்கு இனங்களை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.