வானில் விமானம் பறந்தபோது, பயணி ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே, அதே விமானத்தில் பயணித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சிகிச்சை அளித்து காப்பாற்றினார்.

வானில் விமானம் பறந்தபோது, பயணி ஒருவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்படவே, அதே விமானத்தில் பயணித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் சிகிச்சை அளித்து காப்பாற்றினார்.

தமிழக்தில் பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை செளந்திரராஜன், சிறந்த மருத்துவர், மகப்பேறு சிறப்பு நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. தெலங்கானாஆளுநராக மட்டுமல்லாமல் கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் தமிழிசை இருந்து வருகிறார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்து அளித்த பிரதமர்..! யாரெல்லாம் பங்கேற்றார்கள் தெரியுமா?

கடந் 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந்ததையடுத்து, தெலங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் நேற்று வாரணிசியிலிருந்து டெல்லி வழியாக ஹெதராபாத்துக்கு இன்டிகோ விமானத்தில் பயணம் செய்தார். 

மேற்கு வங்க அமைச்சரின் உதவியாளர் வீட்டில் சோதனை... ரூ.20 கோடி ரொக்கம், செல்போன்கள் பறிமுதல்!!

விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென பயணி ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். இதையடுத்து, விமானத்தில் இருந்த ஊழியர்கள் பயணிகளில் யாரேனும் மருத்துவர் இருந்தால் உடனடியாக உதவிக்கு வரவும், பயணி்க்குஉடல் நிலை சரியில்லை என்று கூறி வேண்டுகோள் விடுத்தனர்.

Scroll to load tweet…

இதையடுத்து, விமானத்தில் பயணித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை தனது இருக்கையில் இருந்து எழுந்து அந்த பயணியிடம் சென்று முதல்கட்ட சிகிச்சை அளித்தார். தமிழிசையின் தக்க நேர உதவியால் அந்தப் பயணி உயிர் காப்பாற்றப்பட்டது.

தேசிய அளவில் வளரும் ஆம் ஆத்மி.. சகித்துக் கொள்ளாத பாஜக.. அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லும் காரணம்!

தனது உயிரைக் காப்பாற்றிய ஆளுநர் தமிழிசைக்கு அந்தப் பயணி நன்றி தெரிவித்தார். விமானத்தில் வந்த மற்ற பயணிகளும் தெலங்கானா ஆளுநர் தமிழிசையை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர். 

ஏராளமான பயணிகள் விமானம் பறந்துகொண்டிருந்தபோதே தமிழிசையுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அதை தங்களின் சமூகவலைத்தளப் பக்கங்களிலும் பகிர்ந்து பாராட்டுத் தெரிவித்தனர்