மேற்கு வங்க அமைச்சரின் உதவியாளர் வீட்டில் சோதனை... ரூ.20 கோடி ரொக்கம், செல்போன்கள் பறிமுதல்!!

மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் வீட்டில் இருந்து சுமார் 20 கோடி ரூபாய் ரொக்கம் அமலாக்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

20 crore in cash recovered by ed from the house of an associate of west bengal minister

மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜி என்பவரின் வீட்டில் இருந்து சுமார் 20 கோடி ரூபாய் ரொக்கம் அமலாக்கத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. முன்னதாக மேற்கு வங்கத்தில் ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக அர்பிதா முகர்ஜியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 20 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தேசிய அளவில் வளரும் ஆம் ஆத்மி.. சகித்துக் கொள்ளாத பாஜக.. அரவிந்த் கெஜ்ரிவால் சொல்லும் காரணம்!

20 crore in cash recovered by ed from the house of an associate of west bengal minister

பறிமுதல் செய்யப்பட்ட இந்த தொகையானது எஸ்எஸ்சி ஊழலில் கிடைத்த வருமானமாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுவதாக விசாரணை நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட பணத்தை இயந்திரங்கள் மூலம் எண்ணுவதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் வங்கி அதிகாரிகளின் உதவியை நாடியுள்ளனர். மேலும் அர்பிதா முகர்ஜியின் வளாகத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவற்றின் பயன்பாடுகள் குறித்து கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. 

இதையும் படிங்க: ஒன்றாக உக்காரக் கூடாது… பஸ் ஸ்டாப் சீட்டை வெட்டிய மக்கள்… நூதன முறையில் மாணவர்கள் பதிலடி!!

20 crore in cash recovered by ed from the house of an associate of west bengal minister

சட்டர்ஜியைத் தவிர, கல்வித்துறை இணை அமைச்சர் பரேஷ் சி ஆதிகாரி, எம்எல்ஏ மாணிக் பட்டாச்சார்யா உள்ளிட்டோர்களின் இடங்களிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. தற்போது தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சராக இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி, மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சட்டவிரோத நியமனங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படும் போது கல்வி அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios