யார் இந்த சுனில் கனுகோலு? தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றிக்கு வித்திட்ட மாஸ்டர் பிளான் என்ன?
தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றிக்கு வழிவகுத்த சுனில் கனுகோலு கடந்த காலங்களில் பல தேர்தல்களில் பாஜகவுக்காகவும் வியூகம் வகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்
தேர்தல் வியூக வகுப்பாளரான சுனில் கனுகோலு, தனது திட்டம் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு தெலுங்கானாவில் வெற்றி தேடித் தந்திருக்கிறார். கர்நாடகாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு உதவிய இவர் அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு தெலுங்கானாவிலும் தனது திறமைமை நிரூபித்துள்ளார்.
தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் சுனில் கனுகோலுவும் மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டியும் இணைந்து செயல்பட்டு, மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும் ஆசையில் இருந்த சந்திரசேகர் ராவ் தலைமையிலானா பிஆர்எஸ் கட்சியை வீழ்த்தியுள்ளனர்.
119 உறுப்பினர்களைக் கொண்ட தெலுங்கானா சட்டசபையில் காங்கிரஸ் 64 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆனால், இந்தி பெல்ட் என்று கூறப்படும் மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது.
பாஜக வெற்றிக்கு காங்கிரஸ்தான் காரணம்... இது காங்கிரஸின் தோல்வி: மம்தா பானர்ஜி காட்டம்
தேர்தலுக்கு முன் கட்சியின் தேசியத் தலைமையின் உத்தரவைத் தொடர்ந்து சுனில் கனுகோலு ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்திலும் களமிறங்கினார். ஆனால் பிராந்தியத் தலைவர்களான அசோக் கெலாட் மற்றும் கமல்நாத் ஆகியோர் சுனில் கனுகோலுவுடன் இணைந்து செயல்பட விரும்பவில்லை.
ராஜஸ்தான் தேர்தலுக்கு முன்னதாக, சுனில் கனுகோலு வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளர்களின் பட்டியலை அசோக் கெலாட்டுக்குப் பரிந்துரை செய்துள்ளார். ஆனால், அசோக் கெலாட் அதை ஏற்கவில்லை என்றும், அதற்குப் பதிலாக நரேஷ் அரோராவின் திட்டத்தைப் பின்பற்ற முடிவு செய்தார் என்றும் கூறப்படுகிறது.
கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் சுனில் கனுகோலுவை காங்கிரஸ் கட்சி சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்தது என்றும் அதன் விளைவாகவே இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற முடிந்தது என்று அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
கர்நாடகாவைச் சேர்ந்த சுனில் கடந்த மே மாதம் அந்த மாநிலத்தில் நடந்த தேர்தலில், பாஜகவுக்கு எதிராக PayCM என்ற பெயரில் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தைத் திட்டமிட்டார். தெலுங்கானாவில் தேர்தலுக்கு முன்னதாக, சந்திரசேகர் ராவ் ஆட்சியில் எழுந்த ஊழல் புகார்களை முன்னிலைப்படுத்தி தனது வியூகத்தை உருவாக்கினார்.
இதை எப்படி சாப்பிடுறது? ஜோமேட்டோவில் ஆர்டர் செய்த ஹைதராபாத் பிரியாணியில் பல்லி!
கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸால் பிரச்சாரங்கள் ஒரே மாதிரி இருந்தன. இரண்டு மாநிலங்களும் ஆளும் ஆட்சியின் ஊழலை மையப்படுத்தி பிரச்சாரம் செய்ததது பலனைக் கொடுத்திருக்கிறது. அத்துடன் மக்கள நலத் திட்டங்களுக்கான உத்தரவாதங்களும் சாதகமாக அமைந்தன.
சுனில் கனுகோலு கடந்த காலங்களில் பல தேர்தல்களில் பாஜகவுக்காகவும் வியூகம் வகுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். 2018 இல், அவர் கர்நாடகாவில் பாஜகவுடன் இணைந்து பணியாற்றினார். அப்போது பாஜக 104 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
2014 இல் நரேந்திர மோடியின் பிரச்சாரத்திலும், உத்தரபிரதேசம் மற்றும் குஜராத்தில் பாஜகவின் பிரச்சாரங்களிலும் பணியாற்றினார்.
McKinsey நிறுவனத்தின் முன்னாள் ஆலோசகரான சுனில் கனுகோலு, தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது மேற்கொண்ட 'நமக்கு நாமே' பயணத்தின் பின்னணியிலும் செயல்பட்டிருக்கிறார். 2021ஆம் ஆண்டில், சுனில் திமுகவிற்கு எதிராக அதிமுகவுடன் இணைந்து பணியாற்றினார். அப்போது அதிமுக சட்டமன்றத் தேர்தலில் 75 இடங்களை மட்டும் பெற்ற தோல்வி அடைந்தது.
சுனில் கனுகோலு கடந்த ஆண்டு காங்கிரஸில் சேர்ந்ததை அடுத்து கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாகப் பணியாற்றினார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பயணித்த ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ யாத்ரா'வை திட்டமிட்டவர் இவர்தான். இச்சூழலில் கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் அடைந்துள்ள வெற்றி காரணமாக காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலுக்கு முன் சுனில் கனுகோலுவுக்கு கூடுதல் பொறுப்புகளை வழங்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.