பிரதமர் மோடியின் நிகழ்ச்சியைப் புறக்கணித்த தெலுங்கானா முதல்வர்
பிரதமர் நரேந்திர மோடி வருகையை புறக்கணித்த சந்திரசேகர ராவ் பேகம்பேட் விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்கவும் செல்லவில்லை.
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியின் நிகழ்ச்சியைப் புறக்கணித்துள்ளார். தொடர்ந்து கர்நாடகா, தெலுங்கானா என விரைவில் தேர்தலைச் சந்திக்க இருக்கும் மாநிலங்களில் பல நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார்.
இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் சனிக்கிழமை பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு அந்த மாநில முதல்வர் முதல்வர் கேசிஆர் அழைக்கப்பட்டார். ஆனால், பிரதமர் வருகையை புறக்கணித்திருக்கும் சந்திரசேகர ராவ் பேகம்பேட் விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை வரவேற்கவும் செல்லவில்லை. ஆனால், தெலுங்கானா மாநில ஆளுநரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவருமான தமிழசை சௌந்தர்ராஜன் பிரதமரை விமான நிலையத்தில் சந்தித்து வரவேற்பு தெரிவித்தார்.
தெலுங்கானாவில் அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் நுழைய முயற்சிக்கும் பாஜகவுடன் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) மோதலில் ஈடுபட்டுள்ளது. மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. மறுபுறம், கேசிஆர் தனது தேசிய லட்சியத்தின் ஒரு பகுதியாக தனது கட்சியை மற்ற மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த முயற்சி செய்கிறார்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வதற்கான தேசியக் கட்சியாக மாறுவதற்கான முதல் படியாக, கடந்த ஆண்டு, தனது கட்சியின் பெயரை தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி என்பதில் இருந்து பாரத் ராஷ்டிர சமிதி என்று மாற்றினார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார்.
தெலுங்கானாவில் ₹ 11,300 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டுவார். செகந்திராபாத் - திருப்பதி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை செகந்திராபாத் ரயில் நிலையத்தில் பிரதமர் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். பிரதமர் மோடி செகந்திராபாத் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்கான திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
தெலுங்கானாவில் ஏழைகளுக்கான ரேஷனையும் குடும்ப அரசியல் கட்சிகள் கொள்ளையடித்தன:பிரதமர் மோடி!!