உத்தரப் பிரதேசம் கன்னோசியில், திருமண விருந்தில் கூடுதலாக ஒரு சிக்கன் துண்டு கேட்ட தாத்தாவிற்கு ஆதரவாக பேசிய 15 வயது சிறுவன், செங்கல்லால் தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டான். 

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோசியில் கூடுதலாக ஒரு சிக்கன் லெக் பீஸ் கேட்ட தாத்தாவிற்கு ஆதரவாக பேசியதால் 15 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திருமண விழா விருந்தின் போது 15 வயது சிறுவனுடன் இருந்த 65 வயது தாத்தா கூடுதலாக ஒரு சிக்கன் துண்டு கேட்டதை தொடர்ந்து பிரச்சனை தொடங்கியது.

65 வயது முதியவரை திருமண வீட்டார் கேலி செய்து, பொது இடத்தில் அவமானப்படுத்தியதை அடுத்து 15 வயது சிறுவன் தட்டிக் கேட்டான். இதைத் தொடர்ந்து, ஒரு கும்பல் சிறுவனை மார்பு மற்றும் முதுகில் செங்கல்லால் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் நிலைகலைந்து சரிந்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

15 வயது சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதுமே தாக்குதல் நடத்தியவர்கள் திருமண வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணைக்கு மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதியில் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்து போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சிறுவனின் தந்தை மற்றும் நெருங்கிய உறவினர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. கன்னோசி வினோத் குமார், சர்க்கிள் இன்ஸ்பெக்டர் திர்வா குல்வீர் சிங், இன்ஸ்பெக்டர் இன் சார்ஜ் சஞ்சய் குமார் சுக்லா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து, வேறு எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.