நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைப்பது தொடர்பாக ஆராய உயர்நிலைக்குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் பாயும் நதிகளை இணைப்பது குறித்து ஆராய உயர்நிலைக் குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் 2012-ம் ஆண்டில் உத்தரவிட்டது. ஆனால் 4 ஆண்டுகளாகியும் உயர்நிலைக் குழு அமைக்கப்படவில்லை.

இந்நிலையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நதிகள் இணைப்பு தொடர்பாக ஆராய உயர்நிலைக் குழுவை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த குழுவில் நீர்வளத்துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையைச் சேர்ந்தவர்கள் இடம்பெறுவார்கள். இந்த குழுவானது நதிகளை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கையாக அளிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு இறுதி முடிவு எடுக்கும்.