மும்பை 26/11 தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா அமெரிக்காவிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்டு NIAவால் கைது செய்யப்பட்டார். நாடு கடத்தப்படுவதை தவிர்க்க அவர் செய்த முயற்சிகள் தோல்வியடைந்தன, 2009 முதல் நடந்த வழக்கு விவரங்கள் இங்கே.
Tahawwur Rana arrested in Delhi by NIA: மும்பை 26/11 பயங்கரவாத தாக்குதலின் குற்றவாளியான தஹாவூர் ராணா அமெரிக்காவிலிருந்து இந்தியா கொண்டு வரப்பட்டார். தற்போது அவர் என்ஐஏவின் பிடியில் உள்ளார். இந்தியா வருவதைத் தவிர்க்க ராணா அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டது. தன்னை பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர் என்று கூறி, இந்தியாவுக்கு அனுப்பினால் சித்திரவதை செய்வார்கள் என்று ராணா கெஞ்சி பார்த்தார். இருப்பினும், அமெரிக்கா-இந்தியா இடையே உள்ள நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் காரணமாக, 16 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இந்தியாவின் பிடியில் சிக்கினார். 2009 முதல் இதுவரை இந்த வழக்கில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வோம்?
1- அக்டோபர் 2018-ல் கைது செய்யப்பட்ட தஹாவூர் ராணா
டேவிட் கோல்மன் ஹெட்லி கைது செய்யப்பட்ட 9 நாட்களுக்குப் பிறகு, அக்டோபர் 18, 2009 அன்று, தஹாவூர் ராணா சிகாகோவில் கைது செய்யப்பட்டார். டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள ஒரு செய்தித்தாளின் அலுவலகத்தைத் தாக்குவதற்கு சதி செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
2- 2011-ல் மும்பை தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்
சிகாகோவின் ஒரு பெடரல் நீதிமன்றம் தஹாவூர் ராணா லஷ்கர்-இ-தொய்பாவுக்கு உதவியதாகக் கண்டறிந்தது. ஆனால் அவர் நேரடியாக மும்பை 26/11 தாக்குதல்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
திகார் சிறைக்குச் செல்லும் தஹாவூர் ராணா; ரகசிய விசாரணைக்கு ஏற்பாடு!
3- இந்தியாவின் என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது
2011-ல், தஹாவூர் ராணாவுக்கு எதிராக இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் அவர் மீது கொலை, போர் தொடுக்கும் சதி மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
4- 2019-ல் தஹாவூர் ராணாவை நாடு கடத்த இந்தியா கோரிக்கை வைத்தது
டிசம்பர் 4, 2019 அன்று, இந்தியா முதன்முறையாக ராஜதந்திர வழிகள் மூலம் தஹாவூர் ராணாவை நாடு கடத்தக் கோரிக்கை வைத்தது.
5- என்ஐஏ தஹாவூர் ராணா மீது பிடி இறுகியது
இதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) ஜூன் 10, 2020 அன்று தஹாவூர் ராணாவை தற்காலிகமாக கைது செய்யக் கோரியது.
6- பைடன் நிர்வாகமும் நாடு கடத்தலுக்கு ஆதரவு தெரிவித்தது
2021-ல், இந்தியா அதிகாரப்பூர்வமாக தஹாவூர் ராணாவை நாடு கடத்தக் கோரி அமெரிக்க நீதித்துறைக்கு கடிதம் எழுதியது. பைடன் அரசாங்கம் இதற்கு ஆதரவு அளித்தது.
இந்தியாவுக்கு நாடுகடத்தப்படும் மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா
7- நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்க தஹாவூர் ராணா சாக்குப்போக்கு தேடினார்
நவம்பர் 13, 2024 அன்று, தஹாவூர் ராணா லோயர் கோர்ட்டின் நாடு கடத்தல் முடிவை உச்ச நீதிமன்றத்தில் எதிர்த்தார். அது ஜனவரி 21, 2025 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது. இந்தியா-அமெரிக்கா இடையே உள்ள நாடு கடத்தல் ஒப்பந்தத்தின் காரணமாக அவர் இந்தியாவுக்கு அனுப்பப்படலாம் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெளிவாகக் கூறியது.
8- ஏப்ரல் 10 அன்று பயங்கரவாதி தஹாவூர் ராணா இந்தியா வந்தடைந்தார்
என்ஐஏ மற்றும் உளவுத்துறை அமைப்பான ரா-வின் கூட்டு குழு தஹாவூர் ராணாவை ஏப்ரல் 9 அன்று அமெரிக்காவிலிருந்து அழைத்துக் கொண்டு, ஏப்ரல் 10 ஆம் தேதி டெல்லி வந்தடைந்தது.
9. Tahawwur Rana மீதான குற்றப்பத்திரிக்கை:
மும்பையில் குடியேற்ற சட்ட மையத்தை அமைப்பது உள்பட பல வழிகளில் ஹெட்லிக்கு ராணா உதவியதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் பிரதிநிதியாக டெல்லி, ஜெய்ப்பூர், புஷ்கர், கோவா, புனே மற்றும் மும்பை உள்ளிட்ட பல இந்திய நகரங்களுக்கு ஹெட்லி பயணம் செய்துள்ளார். ராணா 2008 நவம்பரில் இந்தியாவிற்கும் விஜயம் செய்துள்ளார்.
டெல்லியில் NIA கைது செய்தது:
டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் வந்தடைந்த தஹாவூர் ராணாவை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். இவரை அழைத்து செல்லும் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது. தேவையான அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்றி, விமானத்தில் இருந்து இறங்கிய சிறிது நேரத்திலேயே, பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த கனடா குடிமகனும், பெரும்பாலும் சிகாகோவில் வசித்து வந்தவருமான ராணாவை, தங்கள் விசாரணைக் குழு "முறையாகக் கைது செய்துள்ளதாக" NIA அறிவித்துள்ளது. தஹாவூர் ராணா என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இவரை 18 நாட்கள் விசாரிக்க NIA-வுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
