Asianet News TamilAsianet News Tamil

“சர்ஜிகல் ஸ்டிரைக்” தாக்குதலில் ஈடுபட்ட சிறப்பு கமாண்டோ படையினர் - எப்படி பயிற்சி எடுத்தார்கள் தெரியுமா?

surgical strike-army-men-training-details
Author
First Published Oct 10, 2016, 8:05 AM IST


காஷ்மீரின் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக, இந்திய ராணுவத்தினர், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து “சர்ஜிகல் ஸ்டிரைக்” தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளையும், முகாம்களையும் அழித்து திரும்பினர். 

இந்த தாக்குதலை நடத்த இந்திய ராணுவத்தில் சிறப்பு கமாண்டோ படைப் பிரிவு ஒன்று இருக்கும் அந்த படையைச் சேர்ந்த சிறப்பு பயிற்சி எடுத்த வீரர்களே இந்த “சர்ஜிகல் ஸ்டிரைக்”கை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். 

அப்படி என்ன சிறப்பு பயிற்சி இந்த கமாண்டோ படையினருக்கு கொடுக்கப்படுகிறது…..

பொதுவாக ராணுவத்தில் சிறப்பு கமாண்டோ படைக்கு ஆண்டுதோறும் 400 முதல் 500 வீரர்கள் சேர்ந்தாலும், அதில் மிகச்சிறப்பாக பணியாற்றும், செயலாற்றும் வீரர்களே இதுபோன்ற தாக்குதலுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 

அவ்வாறு தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு 2 மாதம் கடினமான, அதிசிறப்பு பயிற்சி அளிக்கப்படும். அதில் ஒருவீரர் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சம் 20 முதல் 22 மணிநேரம் வரை பயிற்சி எடுக்க வேண்டும். 

surgical strike-army-men-training-details

அதாவது கான்கிரீட் சாலையில் நாள்தோறும் நீண்டநேரம் நடப்பது, 3 முதல் 4 கிலோமீட்டர் வரை உருண்டுகொண்டே செல்லும் பயிற்சி கொடுக்கப்படும். 

எதிரிகளிடம் சிக்கிக்கொண்டால் அவர்களின் உடல்ரீதியான கொடுமைகளைத் தாங்க உடல்வலிமை சார்ந்த பயிற்சிகளும், மனவலிமைக்காக, மனரீதியாக கடினமான பயிற்சி  அளிக்கப்படும். 

அதாவது, ஒரு வீரர் பயிற்சி எடுத்து உடல் சோர்வடைந்துவிட்டால், உடனடியாக அவரிடம் ஒரு புத்தகம் கொடுத்து படிக்கக் கூறி 2 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும். அது முடிந்தவுடன் மற்றொரு புத்தகத்தை கொடுத்து அது குறித்த நூல் உரை எழுத பணிக்கப்படுவார்கள். 

குறிப்பாக அடர்ந்த வனப்பகுதிக்குள் வீரர்கள் சிக்கிக்கொள்ளும் போது எதையாவது சாப்பிட்டு உயிர்வாழ வேண்டும் என்பதால், வீரர்களுக்கு கண்ணாடித் துண்டுகளை தின்று செரிக்க பயிற்சி அளிக்கப்படும். பாம்புகளை கையால் பிடித்து பழக பயிற்சி கொடுக்கப்படும். 

surgical strike-army-men-training-details

மேலும், , முதுகில் 25 கிலோ எடையை சமந்து 40 கிலோமீட்டர் தொலைவை குறிப்பிட்ட நேரத்துக்குள் கடந்துசெல்ல பயிற்சி அளிக்கப்படும். அதாவது ஒவ்வொரு 10 கிலோமீட்டருக்கும் கடக்கும் வேகம், அடுத்த 10 கிலோமீட்டருக்கும் கடைபிடிக்குமாறு வீரர்கள் பயிற்சி எடுப்பார்கள். 

வீரர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சியில், எதிரிகளை சமாளிக்க 4 விதமான பயிற்சி அளிக்கப்படும். வாகனம் ஓட்டுதல், அழித்தல், போர்களத்தில் வீர்ர்களுக்குள் உதவுதல், தகவல்தொடர்பு ஆகிய குறித்து பயிற்சி அளிக்கப்படும்.  இந்த பயிற்சியின் முடிவில் சிறப்பான வீரர்களே “சர்ஜிகல் ஸ்டிரைக்” போன்ற துல்லியத் தாக்குலுக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 

இறுதியா, தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு ஒரு கடினமான பயிற்சி அளிக்கப்படும். அதாவது, அடர்ந்த காட்டுக்குள் 40 கி.மீ. வரை சென்று அங்கு வீரர்களுக்கு இருக்கும் இலக்கை தேடிக் கண்டுபிடித்து கொண்டு வர வேண்டும். 

இந்த சோதனையின் போது, வீரர்களுக்கு திசையறியும் கருவி, ஜி.பி.எஸ். கருவிகள் தரப்படாது. தங்களின் பயிற்சியின் அடிப்படையில் இதை வீரர்கள் எதிர்கொள்ள வேண்டும். இந்த சோதனையில் தோல்வியடையும் வீரர், வெற்றி அடையும் வரை காட்டுக்குள் அனுப்பி சோதனை செய்யப்படுவர். 

surgical strike-army-men-training-details

இந்த சோதனையில் வெற்றிபெற்று, பயிற்சியை முடித்தவர்கள், 10 முதல் 15 வீர்ர்கள் கொண்ட பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, பாலைவனப் பகுதி, மலைப்பகுதி, சமவெளிப்பகுதி என பிரித்து அனுப்பபடுவார்கள். 

ஆனால், சமீபத்தில் நடந்த “சர்ஜிகல் ஸ்டிரைக்”கின் போது, வீரர் ஒருவர் தனது முதுகில் சராசரியாக 75 கிலோ எடை சுமந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இத்தகைய கடினமான பயிற்சியை முடித்து தேறிய வீர்ர்கள் தான் சமீபத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் புகுந்து சர்ஜிகல் ஸ்டிரைக்கை வெற்றிகரமாக முடித்து திரும்பியுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios