Asianet News TamilAsianet News Tamil

அவதூறு வழக்கு.. ராகுல்காந்தி தாக்கல் செய்த மனு.. உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..

மோடி பெயர் தொடர்பான அவதூறு வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

Supreme Court to hear Rahul Gandhi's plea challenging Gujarat HC order on defamation case
Author
First Published Jul 18, 2023, 8:28 AM IST

2019-ம் ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி ” எப்படி எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பொதுவான பெயர் உள்ளது என்று லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை குறிப்பிட்டு பேசியிருந்தார். இதை தொடர்ந்து அவர் மீது, மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து ராகுல்காந்தி மோடி சமூகத்தினரை இழிவுப்படுத்தியதாக கூறி அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு, டெல்லியில் தான் வசித்து வந்த, அரசு பங்களாவை ராகுல்காந்தி காலி செய்தது என அடுத்தடுத்த சம்பவங்கள் அரங்கேறின.

இதனிடையே தனக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி சூரத் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனை நிறுத்தி வைக்கவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் ராகுல் காந்திக்கு எதிராக சுமார் 10 கிரிமினல் அவதூறு புகார்கள் நிலுவையில் இருப்பதாகவும், செஷன்ஸ் நீதிமன்ற உத்தரவு சரியானது என்பதால் அதில் தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும் குஜராத் உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து, ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனைக்கு உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்ததைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். தனது சிறை தண்டனையை உடனடியாக நிறுத்துமாறு மனுவில் ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.

இந்த தண்டனை உத்தரவு சுதந்திரமான பேச்சு, சுதந்திரமான கருத்து, சுதந்திரமான சிந்தனை மற்றும் சுதந்திரமான கருத்து ஆகியவற்றைத் தடுக்க வழிவகுக்கும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் "இது ஜனநாயக அமைப்புகளின் முறையான, மீண்டும் சீர்குலைக்கப்படுவதற்கும், அதன் விளைவாக ஜனநாயகத்தின் கழுத்தை நெரிப்பதற்கும் பங்களிக்கும், இது இந்தியாவின் அரசியல் சூழல் மற்றும் எதிர்காலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்" என்று அவர் கூறினார். இந்த நிலையில் இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில்  விசாரணைக்கு வருகிறது.

சட்டத்தின் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றதால் ராக்குல்காந்தி 8 ஆண்டுகளுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நுழைய முடியாது. மேலும் தேர்தலிலும் போட்டியிட முடியாது. ஆனால் உச்சநீதிமன்றம் ராகுல்காந்தியின் தண்டனையை ரத்து செய்தால் இந்த விதி பொருந்தாது. அவர் மீண்டும் நாடாளுமன்றத்தில் எம்.பியாக நுழையலாம். தேர்தலில் போட்டியிடவும் தடை இருக்காது.

ஷாக்கிங் நியூஸ்.. கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்..!

Follow Us:
Download App:
  • android
  • ios