BBC Modi Documentary:பிபிசி-யின் பிரதமர் மோடி ஆவணப்படத் தடைக்கு எதிரான மனு:உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

BBC Modi Documentary:பிபிசி சேனல் தயாரித்துள்ள 2002ம் ஆண்டு குஜராத் கலவரம் மற்றும் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தைத் திரையிட மத்திய அரசு விதித்துள்ள தடைக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றது.

Supreme Court of India allows to hear PILs against a BBC documentary about the violence in Gujarat in 2002

BBC Modi Documentary: பிபிசி சேனல் தயாரித்துள்ள 2002ம் ஆண்டு குஜராத் கலவரம் மற்றும் பிரதமர் மோடி குறித்த ஆவணப்படத்தைத் திரையிட மத்திய அரசு விதித்துள்ள தடைக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றது.

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் முதல்வராக நரேந்திர மோடி இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவமும், அதைத் தொடர்ந்து பெரிய அளவிலான கலவரமும் ஏற்பட்டது. 

பிசிசி செய்த அபத்தத்தைப் பாருங்க... மேப்பைக் காட்டி ட்வீட் போட்ட அனில் அந்தோணி

இந்த கலவரத்தில் முஸ்லிம்கள் ஏராளமானோர் கொல்லப்பட்டது குறித்து பிபிசி சேனல், “ India:The Modi Question”  என்ற ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படத்தை ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் என எந்த சமூக வலைத்தளத்திலும் லிங்குகளை பதிவிடக்கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது.

ஆனால், மத்திய அரசின் எதிர்ப்பை மீறி தெலங்கானா, கேரளா, டெல்லி பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் திரையிட்டு பார்த்து வருகிறார்கள். இதனால் தொடர்ந்து சர்ச்சைகள் ஏற்பட்டு வருகின்றன.
பிபிசி ஆவணப்படத்துக்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்எல் ஷர்மா, மூத்த வழக்கறிஞர்கள் சியு சிங் ஆகியோர் மனுத்தாக்ககல் செய்து  அவசர மனுவாக எடுக்கக் கோரினர். மேலும், பத்திரிகையாளர் என் ராம், மூத்த வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன் ஆகியோரும் தனித்தனியாக மனுத்தாக்கல் செய்திருந்தார்கள். 

தமிழகம் அல்லது மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்க வாய்ப்புள்ள கேப்டன் அமரிந்தர் சிங்?

இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா, பி பர்திவாலா ஆகியோர் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் ஷர்மா வாதிடுகையில் “ இந்த திரைப்படத்தைப் பார்க்கும் மக்கள் கைது செய்யப்படுகிறார்கள். இந்த ஆவணப்படத்துக்கு தடைவிதித்தது சட்டவிரோதம், அரசியலமைப்புக்கு விரோதமான ஒன்று” எனத் தெரிவித்தார்.

இந்த மனுவைவிசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வு, “ இந்த மனுவை விசாரணைக்கு ஏற்கிறோம். பிப்ரவரி 6ம் தேதி இந்த மனு விசாரிக்கப்படும் “என உத்தரவிட்டார்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios