காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அனில் அந்தோணி பிபிசி செய்தி நிறுவனம் ஜம்மு காஷ்மீரைத் தவிர்த்துவிட்டு இந்திய வரைபடத்தை வெளியிட்டிருக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஏ. கே. அந்தோணியின் மகன் அனில் அந்தோணி. இவர் அண்மையில் பிபிசி நிறுவனம் வெளியிட்ட 2002 குஜராத் கலவரம் பற்றிய ஆவணப்படத்துக்குக் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.

இந்நிலையில், இன்று ட்விட்டரில் பதிவிட்ட அவர் பிபிசி நிறுவனம் இதற்கு முன் 2020ஆம் ஆண்டு இந்தியாவின் வரைபடத்தில் ஜம்மு காஷ்மீரை நீக்கிவிட்டு வெளியிட்டதைச் சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.

“பிசிசியின் கடந்தகால அபத்தங்கள் சிலவற்றைப் பாருங்கள்... திரும்பத் திரும்ப தவறு செய்யும் பிபிசி நிறுவனம், இந்தியாவின் எல்லையைக் கேள்விக்குள்ளாக்கும் வகையில் திரிக்கப்பட்ட வரைபடத்தை வெளியிட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

மேலும், “இன்றைய காங்கிரஸ் கட்சிக்கு சரியான கூட்டணி” என்றும் விமர்சித்துள்ளார். இவரது இந்த டவீட்டுக்கு காங்கிரஸ் கட்சியின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் பிரஷாந்த் பிரதாப் பதில் அளித்துள்ளார்,

இந்திய வரைபடத்தை தவறாக வெளியிட்டதற்கு பிசிசி ஏற்கெனவே மன்னிப்பு கோரியுள்ளது பற்றிய செய்தியைச் சுட்டிக்காட்டிய பிரதாப், “நீங்கள் ஏதோ ஒரு திட்டத்துடன் செயல்பட்டு வருவது போலத் தெரிகிறது” என்றும் குறிப்பிட்டள்ளார்.

Scroll to load tweet…