Amarinder Singh: தமிழகம் அல்லது மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்க வாய்ப்புள்ள கேப்டன் அமரிந்தர் சிங்?
Amarinder Singh: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங், விரைவில் மகாராஷ்டிரா அல்லது தமிழ்நாடு அல்லது மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Amarinder Singh: பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங், விரைவில் மகாராஷ்டிரா அல்லது தமிழ்நாடு அல்லது மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிரா ஆளுநராக தற்போது இருக்கும் பகத்சிங் கோஷ்யாரியால் பல்வேறு சிக்கல்கள் மாநிலத்தில் உருவாகி வருகின்றன. எதிர்க்கட்சிகளான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்து கோஷ்யாரிக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்து அவரை மாற்ற வலியுறுத்தி வருகின்றன.
தேசிய கொடியுடன் பைக்கில் ஸ்டண்ட் காட்டிய இளைஞர்.. பீதியில் ஓடிப்போன பொதுமக்கள் - வைரல் வீடியோ !!
சில நேரங்களில் கோஷ்யாரி தெரிவித்த கருத்துக்கள் பாஜகவுக்கே தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்திவிட்டது.
அதிலும் குறிப்பாக சத்ரபதி சிவாஜி மகராஜ் குறித்து கோஷ்யாரி தெரிவித்த கருத்துக்கள் மாநிலத்தில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தின. இதையடுத்து ஆளுநர் கோஷ்யாரியை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன
மகாராஷ்டிரா ஆளுநராக பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்கை நியமிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஆனால், இதுவரை உறுதியான முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை. ஆனால், நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பின் அறிவிப்பு வெளியாகலாம். மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்படாவிட்டால் தமிழ்நாடு அல்லது மேற்கு வங்கத்துக்கு ஆளுநராக நியமிக்கப்படலாம். இந்த 3மாநிலங்களின் ஆளுநர்கள் விரைவில் மாற்றப்பட உள்ளனர் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்ரா திடீர் நிறுத்தம்: காரணம் என்ன?
தமிழ்நாடு ஆளுநராக இருக்கும் என்.ரவி, சமீபத்தில் தமிழ்நாடு பெயர் சர்ச்சையில் சிக்கினார். அது மட்டுமல்லாமல் தமிழக அரசு அனுப்பிய பல மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்துகிறார் என ஆளும் திமுக அரசு குற்றம்சாட்டுகிறது. இதனால் ஆளுநர் ரவியை மாற்றக் கோரி திமுக தரப்பில் வெளிப்படையாகவே கோரிக்கை வைக்கப்பட்டு கடிதமும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சியின் தீவிரவிசுவாசியாக இருந்த அமரிந்தர் சிங், பஞ்சாப் மாநில முதல்வராக இருமுறை பதவி வகித்தார். காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட மோதலில், காங்கிரஸ்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கினார். பின்னர் அந்தக் கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டு, பாஜகவில் அமரிந்தர் சிங் ஐக்கியமாகினார்.
பாஜகவில் அமரிந்தர் சிங்கிற்கு முக்கிய பொறுப்புதரப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. அதிலும் குறிப்பாக ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநராக நியமிக்கப்படலாம் அமரிந்தர் சிங்என்ற தகவல் வெளியானது.
சிந்து நதி ஒப்பந்தம்: பாகிஸ்தானுக்கு இந்தியா நோட்டீஸ்
கடந்த 2019ம் ஆண்டு மகாராஷ்டிரா ஆளுநராக நியமிக்கப்பட்ட பகத்சிங் கோஷ்யாரி சமீபத்தில் சந்தித்த பல்வேறு பிரச்சினைகள், சிக்கலால், பதவியில் இருந்து விலக விரும்பம் தெரிவித்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் மும்பை வந்த பிரதமர் மோடியிடம், இது தொடர்பாக கோஷ்யாரி தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார். தன்னுடைய கடைசி காலத்தில் எழுத்து, ஆன்மீகத்தில் செலவிட இருப்பதாக கோஷ்யாரி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா ஆளுநராக இருக்கும் கோஷ்யமாரி ஒரு நேரத்தில் உத்தரகாண்ட் முதல்வராக இருந்தபோது இதுபோன்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.