ram sethu: ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்கு: 26ம்தேதி விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை வரும் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கிறது.
ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவை வரும் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுக்கிறது.
இலங்கைக்கும், தமிகத்தின் தென்கிழக்கு கடற்பகுதியான பாம்பன் தீவுக்கும் இடையே ராமர் பாலம் இருப்பதாகக் கூறப்படுகிறது. சுண்ணாம்புக் கற்கலால் உருவான இ்ந்த பாலம் ஆதாம் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மத்தியில் ஆண்டபோது சேது கால்வாய் திட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி, இலங்கையின் மன்னார் பகுதியையும், பாக் ஜலசந்தியையும் இணைக்கும் வகையில் கடற்பகுதியில் 83 கி.மீ பகுதிக்கு ஆழமாக கால்வாய் உருவாக்குவதாகும்.
ஆனால, இந்தத் திட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், சுற்றுச்சூழல்ஆர்வலர்கள், இந்து அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. இதையடுத்து, இந்தத் திட்டத்துக்கு எதிராக கடந்த 2007ம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்ச மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சேது கால்வாய் திட்டத்துக்கு தடை பெற்றார்.
மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் “ சேதுக் கால்வாய் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்து ஆலோசிப்பதாகவும், சமூக பொருளாதார ரீதியாக ஏற்படும் பின்னடைவுகளை பரிசீலிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ராமர் பாலம் சேதமடையாமல் இந்தத் திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த முயற்சி எடுக்கிறோம்” எனத் தெரிவித்தது.
கொரோனா காலத்தில் அடித்தட்டு மக்களுக்கு உதவிய மோடி அரசின் திட்டங்கள்… நிர்மலா சீதாராமன் பெருமிதம்!!
சுப்பிரமணியன் சுவாமிக்கு முதல் சுற்றில் வெற்றி கிடைத்து, ராமர் பால் இருப்பதாக அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏற்றுக்கொண்டது. அதன் காரணமாகவே, சேதுகால்வாய் திட்டத்தை மாற்றுப்பாதையில் செயல்படுத்த முடிவு செய்தது.
ராமர் பாலத்தை தேசியச் சின்னமாக அறிவிக்கக் கோரி சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு 6 வாரங்களுக்குள் பதில் அளித்து தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும். மத்திய அரசு பதில் அளிக்காவிட்டால் சுப்பிரமணியன் சுவாமி நீதிமன்றத்தை அணுகலாம் எனத் தெரிவித்தார்.
2020ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவை 3 மாதங்களுக்குப் பின் விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
உச்ச நீதிமன்றம் இந்த மனுவை அவசரமாக விசாரிக்கக் கோரி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
2018லிருந்து 800 குழந்தைகள் உயிரிழப்பு: மத்திய அரசின் சிறப்புக் குழந்தைகள் மையத்தில் நடந்த சோகம்
இந்நிலையில் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு வரும் 26ம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் கிருஷ்ணா முராரி, ஹிமா கோலி ஆகியோர் தலைமையிலான அமர்வில் வரும் 26ம் தேதி இந்த மனு விசாரணைக்கு எடுக்கப்படுகிறது.