கொரோனா தொற்று நோய் தொடங்கிய காலத்தில் இருந்தே PMGKAY மற்றும் PMGKY ஆகிய திட்டங்கள் மூலம் அடித்தட்டு மக்களுக்கு உணவு மற்றும் பணப் பரிமாற்றங்களை உரிய நேரத்திற்குள் மோடி அரசு கொண்டு சேர்த்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

கொரோனா தொற்று நோய் தொடங்கிய காலத்தில் இருந்தே PMGKAY மற்றும் PMGKY ஆகிய திட்டங்கள் மூலம் அடித்தட்டு மக்களுக்கு உணவு மற்றும் பணப் பரிமாற்றங்களை உரிய நேரத்திற்குள் மோடி அரசு கொண்டு சேர்த்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது டிவிட்டர் பக்கத்தில், சமீபத்திய UNDP அறிக்கை,”வளரும் நாடுகளில் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை நிவர்த்தி செய்வது” இந்தியாவில் வறுமையின் மீது பணவீக்கம் மிகக் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும் என்பதைக் காட்டுகிறது, இலக்கு இடமாற்றங்கள் ஏழைக் குடும்பங்களுக்கு விலைவாசி உயர்வைச் சமாளிக்க உதவுகின்றன.

இதையும் படிங்க: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் தேசிய சின்னம் குறித்த விமர்சனம்... மத்திய அமைச்சர் பதிலடி!!

Scroll to load tweet…

இந்தியாவில் பணவீக்கம் ஒரு நாளுக்கு 1.9 டாலர் என்ற குறைந்த வறுமைக் கோட்டிற்கு கீழே யாரையும் தள்ளாது என்று அறிக்கை காட்டுகிறது. அதே சமயம் மக்கள் தொகையில் 0.02% & 0.04% மட்டுமே முறையே ஒருநாளுக்கு 3.3 டாலர் மற்றும் 5.5 டாலர் என்ற உயர் வறுமைக் கோட்டிற்கு கீழே செல்வார்கள். உணவு மற்றும் எரிசக்தி பணவீக்கம் உலகளவில் 71 மில்லியன் மக்களை வறுமையில் தள்ளும் என்று அறிக்கை கூறுகிறது.

இதையும் படிங்க: அடிப்படை வசதிகள செஞ்சி கொடுத்தா 100 தோப்புக்கரணம்… அமைச்சரையே வியக்க வைத்த மூதாட்டி!!

Scroll to load tweet…

இலக்கு மற்றும் காலக்கெடுவுக்கான பணப் பரிமாற்றங்கள் தாக்கங்களைத் தீர்க்க மிகவும் பயனுள்ள கொள்கைக் கருவியாக இருப்பதை நாங்கள் காண்கிறோம். தொற்றுநோய் தொடங்கிய காலத்திலிருந்தே, PMGKAY (Pradhan Mantri Garib Kalyan Anna Yojana) மற்றும் PMGKY (Pradhan Mantri Garib Kalyan Yojana) ஆகிய திட்டங்கள் மூலம் அடித்தட்டு மக்களுக்கு உணவு மற்றும் பணப் பரிமாற்றங்களை உரிய நேரத்திற்குள் மோடி அரசு கொண்டு சேர்த்துள்ளது. இந்த முடிவுகள் அரசின் யுக்தியையும் அதன் செயல்திறனை எடுத்துக்காட்டுகின்றன என்று தெரிவித்துள்ளார்.