cara adoption:2018லிருந்து 800 குழந்தைகள் உயிரிழப்பு: மத்திய அரசின் சிறப்புக் குழந்தைகள் மையத்தில் நடந்த சோகம்
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கீழ் வரும் மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில்(CARA) கடந்த 2018ம் ஆண்டிலிருந்து இதுவரை 800 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலும் 2 வயதுக்கு கீழ்பட்ட குழந்தைகள் எனத் தெரியவந்துள்ளது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு கீழ் வரும் மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில்(CARA) கடந்த 2018ம் ஆண்டிலிருந்து இதுவரை 800 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதில் பெரும்பாலும் 2 வயதுக்கு கீழ்பட்ட குழந்தைகள் எனத் தெரியவந்துள்ளது.
அதிகாரிகள், ஊழியர்களின் கவனக்குறைவாலும், முறையான கவனிப்பு இன்றியும், கைவிடுதலாலும், நாய்க்கடி போன்றவற்றால் காப்பாற்ற முடியாத காரணத்தாலும் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.
பிடிஐ செய்தி நிறுவனம் ஏராளமான ஆர்டிஐ மனுக்களைத் தாக்கல் செய்தபின்புதான் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய தத்தெடுப்பு வள ஆணையம்(CARA) மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு கீழ் வருகிறது கடந்த 2015ம ஆண்டு தொடங்கப்பட்ட சுயாட்சிஅமைப்பாகும்.
ஆர்டிஐ மனுவுக்கு சிஏஆர்ஏ ஆணையம் அளித்த பதிலில் “ கடந்த 2018ம் ஆண்டிலிருந்து சிஏஆர்ஏ ஆணையத்தில் இதுவரை நாடுமுழுவதும் 800 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதில் கடந்த 2021-22ம் ஆண்டில் மட்டும் 118 குழந்தைகள், இதில் 104 குழந்தைகள் 2 வயதுக்கு கீழ்உள்ள குழந்தைகள்.
2020-21ம் ஆண்டில் 169 குழந்தைகள், 2019-20ம் ஆணஅடில் 281 குழந்தைகள், 2018-19ம் ஆணஅடில் 251 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதுவரை 819 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதில் 481 குழந்தைகள் பெண் குழந்தைகள், 129 ஆண் குழந்தைகள். உயிரிழந்த குழந்தைகள் பெரும்பாலும் மாற்றுத்திறனாளிகளாகவும், சிறப்புக் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.சிறப்புக் குழந்தைகள் என்றால், அடுத்தவர்கள் உதவியின்றி எந்தசெயலையும் செய்யமுடியாத நிலையில் இருக்கும் குழந்தைகள்.
2 வயதுக்கு கீழ் எத்தனை குழந்தைகள் உயிரிழந்தனர் என்பது குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. நாடுமுழுவதும் உள்ள சிறப்பு தத்தெடுப்பு ஆணையத்தின் கீழ் ஜூன் 28ம் தேதி நிலவரப்படி 7ஆயிரம் குழந்தைகள் பராமரிப்பில் உள்ளனர்.” எனத் தெரிவி்க்கப்பட்டுள்ளது.
சிஏஆர்ஏ ஆணையத்தின் உயர் அதிகாரிகள் கூறுகையில் “ பெரும்பாலன உயிரிழப்புகளில் 2 வயதுக்குள் உயிரிழந்த குழந்தைகள்தான் அதிகம். பெற்றோர்கள் பராமரிக்க முடியாமல் கைவிடப்படும் குழந்தைகள், ஏற்கெனவே இருக்கும் குழந்தைகள் இருப்பதால் பராமரிக்க முடியவில்லை.
இந்த சிறப்பு தத்தெடுப்பு மையத்துக்கு வரும் குழந்தைகளில் பெரும்பாலும் உயிர்வாழ முடியாமல் இறந்து விடுவது துரதிர்ஷ்டமானது. இதற்கு முக்கியக் காரணம் பாதுகாப்பற்ற கைவிடுதல்தான். பெரும்பாலான குழந்தைகள் மிகவும் ஆபத்தான நிலையில்தான் இங்கு கொண்டுவரப்படுகிறார்கள். குறிப்பாக நாய் கடிக்கு மருத்துவம் இன்றி வரும் குழந்தைகள் உயிரிழந்து விடுகிறார்கள்” எனத் தெரிவித்தார்
குழந்தைகள் நல ஆர்வலர் எனாக்சி கங்குலி கூறுகையில் “ ஒவ்வொரு குழந்தையும் எவ்வாறு உயிரிழந்தது, எப்படி உயிரிழந்தது என்பது குறித்து கண்டுபிடிக்க வேண்டும். மிகப்பெரிய அளவில் வெளிப்படைத்தன்மையும், நம்பக்தன்மையும் தேவை” எனத் தெரிவித்தார்
16,155 பெற்றோர் ஒரு குழந்தையை தத்தெடுக்க அதிகாரபூர்வப் பதிவு செய்து 3 ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்தாக, 3,596 குழந்தைகள் சட்டப்பூர்வமாக தத்தெடுக்க 28,501 பெற்றோர் தயாராக உள்ளனர்.
கடந்த 2013ம் ஆண்டு அவுரங்காபாத் ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் பையில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சிளங்குழந்தை அரினா(பெயர்மாற்றம்) அரினாவை 6 மாதக் குழந்தையாக இருந்தபோது டெல்லியைச் சேர்ந்த தம்பதி தத்தெடுத்தனர். இன்று டெல்லியில் சிறந்த பள்ளிக்கூடத்தில் 5ம் வகுப்பு படிக்கும் அரினா, மகிழ்ச்சியாக கிரி்க்கெட், டென்னிஸ் விளையாடி வருகிறார்.
அரினாவின் தாய் கூறுகையில் “ எங்களுக்கு அரினா கிடைத்தது பரிசு. நானும், என் கணவரும் அரினாவை பார்த்த அதிர்ஷ்டசாலிகள். இதுபோன்று ஏராளமான குழந்தைகள் தத்தெடுக்க காத்திருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்