பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அமைச்சரவை இன்று 3ஆவது முறையாக மாற்றி அமைக்கப்படவுள்ளது. 9 புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்றுக் கொள்கின்றனர். குயிரசுத் தலைவர் மாளிகையில் இதற்கான விழா இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சியமைத்ததும் பிரதமர் மோடி தலைமையில் 41 மந்திரிகள் பதவியேற்றனர். இதனையடுத்து, அதே ஆண்டு நவம்பர் மாதத்தில் அமைச்சரவை  விரிவாக்கம் செய்யப்பட்டது. பின்னர், இரண்டு முறை சில அமைச்சர்களின்  இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டன.

வருகிற 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதை கருத்தில் கொண்டு, தான் எதிர்பார்த்த அளவு திறம்பட செயல்படாத மந்திரிகளை நீக்கிவிட்டு புதிய அமைச்சர்களை நியமிப்பது குறித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்நிலையில், ஆறு அமைச்சர்கள், தங்கள் பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தனர்.

அதைத்தொடர்ந்து, சிவ் பிரதாப் ஷுக்லா ,  சத்யபால் சிங் . ராஜ்குமார் சிங்,. அஷ்வினி சவுபே , ஆனந்த்குமார் ஹெக்தே, கஜேந்திர சிங் ஷெகாவத் , வீரேந்திர குமார், அல்போன்ஸ் கண்ணன்தனம் , ஹர்தீப் சிங் பூரி ஆகிய

ஒன்பது பேர் புதிய அமைச்சர்களாக இன்று பதவி ஏற்க உள்ளனர்.

இன்று காலை 10  மணியளவில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெரும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒன்பது பேருக்கும் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப்பிரமாணமும் செய்து வைக்கிறார்.